விடுதலை!

அன்புக்கு விடுதலை
அழுகை யில்லை
ஆசைக்கு விடுதலை
அழிவில்லை...
இச்சைக்கு விடுதலை
இன்பமாய் வாழ
உணர்ச்சிக்கு விடுதலை
உண்ணதமாய் உயர
பயத்திற்க்கு விடுதலை
பயணம் சிறக்க...
பொருளாதார விடுதலை
விவசாயம் செழிக்க
தங்கத்திற்கு விடுதலை
பணமதிப்பு வளர(உயர)
ஊழலுக்கு விடுதலை
ஏற்றத்தாழ்வு நீங்க...
ஒருமைக்கு விடுதலை
கூடிவாழும் போது!
நட்புக்கு விடுதலை
சுயநலமாய் மாறும் போது
காதலுக்கு விடுதலை
கல்யாணம் வரும் போது
(கஷ்டமென வரும் போது)
கஷ்டத்திற்கு விடுதலை
சேமிப்பை துவங்கும் போது!
மருந்திற்கு விடுதலை
உணவே மருந்தாகும் போது!
மானத்திற்க்கும்
மனிதனுக்கும் விடுதலை
மரணத்தின் போது!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1