வாரிசுக்கு...!
தன் வீட்டு வாரிசு
அயல் நாட்டில்
பிறக்க...
மனசெல்லாம் பறக்க
தவமது சிறக்க!
வேண்டாத தெய்வங்களையும்
வேண்டிய தேவைகளையும்...
பட்டியலிட்டு
பெட்டியில் யடைத்து!
பழனிமலை சந்தனம்
திருச்செந்தூர் திருநீறு
குலதெய்வ குங்குமம்
கொடுத்து அனுப்ப
கோர்த்தெடுத்து...
தங்க பேழை யில்லை
அது-ஒன்றை தவிர
பெரும் பொருள்
சேர்த்தெடுத்து!
நெஞ்சமெல்லாம்
வாஞ்சையாய்
அள்ளி யெடுத்து
ஆசையாய்
அடுக்கி வைத்து
பூஜை(க்கு)யாய்...
வந்தவரிட மெல்லாம்
காட்டி
வாங்கிய தெல்லாம்
திரட்டி...
வாசனை திரவியமென்ன
படுக்க சிறுமெத்தை யென்ன
அழக அழகாய்
உடுப்பெடுத்து
வாரம் ஒன்றாய்
சேர்த்தெடுத்து
தங்கச் சங்கென்ன
வெள்ளி கிண்ணமென்ன
அரைஞாண் கொடியும்
அரப்பு பொடியும்
கழுத்துச் செயினும்
கால் கொலுசும்...
பட்டு அழுந்தும்முன்னு
பருத்தியில் மேலாடை
கஸ்தூரி மஞ்சளும்
கறையாத சௌக்காரும்
கட்டி எடுத்து வைச்சு
இல்லை இல்லை
காட்டி யெடுத்து வைச்சு
கண்களிலே காரியம் காட்டி
சாதூரியமாய் செய்தப் பாட்டி
மகன் வயிற்றுப் பிள்ளைக்கு
மக(ல)ராய் வந்த
முல்லைக்கு...
அஞ்சு மூனும் அடுக்காய்
ஆனதங்கு மிடுக்காய்
ஆயத்தமாய்
ஆகாயத்தில் பறப்பதற்கு!
வீட்டையும் எடுக்க
மறந்ததை தவிர
எடுத்துப் போனாள்
நினைப்பையும்
நிழலையும் சேர்த்து!
அயல் நாட்டில்
பிறக்க...
மனசெல்லாம் பறக்க
தவமது சிறக்க!
வேண்டாத தெய்வங்களையும்
வேண்டிய தேவைகளையும்...
பட்டியலிட்டு
பெட்டியில் யடைத்து!
பழனிமலை சந்தனம்
திருச்செந்தூர் திருநீறு
குலதெய்வ குங்குமம்
கொடுத்து அனுப்ப
கோர்த்தெடுத்து...
தங்க பேழை யில்லை
அது-ஒன்றை தவிர
பெரும் பொருள்
சேர்த்தெடுத்து!
நெஞ்சமெல்லாம்
வாஞ்சையாய்
அள்ளி யெடுத்து
ஆசையாய்
அடுக்கி வைத்து
பூஜை(க்கு)யாய்...
வந்தவரிட மெல்லாம்
காட்டி
வாங்கிய தெல்லாம்
திரட்டி...
வாசனை திரவியமென்ன
படுக்க சிறுமெத்தை யென்ன
அழக அழகாய்
உடுப்பெடுத்து
வாரம் ஒன்றாய்
சேர்த்தெடுத்து
தங்கச் சங்கென்ன
வெள்ளி கிண்ணமென்ன
அரைஞாண் கொடியும்
அரப்பு பொடியும்
கழுத்துச் செயினும்
கால் கொலுசும்...
பட்டு அழுந்தும்முன்னு
பருத்தியில் மேலாடை
கஸ்தூரி மஞ்சளும்
கறையாத சௌக்காரும்
கட்டி எடுத்து வைச்சு
இல்லை இல்லை
காட்டி யெடுத்து வைச்சு
கண்களிலே காரியம் காட்டி
சாதூரியமாய் செய்தப் பாட்டி
மகன் வயிற்றுப் பிள்ளைக்கு
மக(ல)ராய் வந்த
முல்லைக்கு...
அஞ்சு மூனும் அடுக்காய்
ஆனதங்கு மிடுக்காய்
ஆயத்தமாய்
ஆகாயத்தில் பறப்பதற்கு!
வீட்டையும் எடுக்க
மறந்ததை தவிர
எடுத்துப் போனாள்
நினைப்பையும்
நிழலையும் சேர்த்து!
Comments
Post a Comment