கை பேசி!



சென்ற நூற்றாண்டின்
மிகப் பெரிய-அரிய
சாதனம்!
தொடர்புக் கொள்ள
தொலை தூர
உறவுக்கு கூட...
நினைத்துப் பார்க்காத
வாய்ப்பு!
நினைத்த நேரம்
நினைத்த மாத்திரம்
நினைவு வரும் போதெல்லாம்
அருகில் அமர்ந்து
நேருக்கு நேர் பேசுவது
போல்...
பலமான சாதனம்
வளமாய் அமைந்தது!
வரபிரசாதமாய்
வாழ்வியல் அர்த்தமாய்
ஆணவ அறிமுகமாய்
அன்று!

நேற்றைய கர்வம்
காணாமல் போக
அதன் வளர்ச்சி யின்
வசதி-அசதி யாக்கினது
இன்று!
நிர்பந்தம் யில்லாமல்
நிதர்சனம் யானது
நமக்குள்...
வேண்டியவை வேண்டாதவை
வேண்டுபவை அனைத்தும்-கை
அடக்க கை பேசியில்!

தூர தேசம் கூட
நம் அருகில்...
துக்கம் விசாரிப்பது-கூட
இதில் தான்!
நட்பான நண்பனையும்
நாண வைக்கும்
நாணமுள்ள பெண்னையும் முகம் கோண வைக்கும்
பேண வேண்டிய
உறவை மோத வைக்கும்
மோத வேண்டிய வற்றை
முற்ற வைக்கும்
இழப்பு என்று தெரிந்தால்-அழைப்பை
தவிர்க்கும்!
அவசரத்திற்கு சிலசமயம் தொடர்புக்கு
அப்பாலே நிறுத்தி
வைக்கும்
நம்மை வெறுப்பேத்தி
தைக்கும்!

வசந்த கால நட்பாய்
ஆரம்பித்து-இன்று
வாழ்க்கை யின்
தத்துவமாய் நம்
எல்லோர் கையிலும்!
தரை இறங்க மறுத்து
நம்மை-தரம் இறக்கி
போனது
நம்மோடு நம் வாழ்வோடு...
வருமானம் பெருகிய
போதும்-இழப்பு முண்டு
இயந்திர கோளாறில்
வளரும் மக்கள்
நிரந்தர கோளாறாய்...

நித்திரை யின் போதும்
உடலில் நீர்தெளிக்கும்
போதும்
பிரிந்திருக்கிறது கை
தவிர்த்திருக்கிறது!

சிறு நீர் கழிக்கும்
போதுகூட சிறிதுநேர
உரையாடல்...
உரையாடல் இல்லாத
போது-எத்தனை யோ
பொழுதுபோக்கு
அத்தனை யும் நம்
பொழுதை யெல்லாம்
பொழைப் பெல்லாம்
போக்குது!

அதில் அறிந்தவைகள்
ஏராளம்...
அறிய முற்பட்ட வைகள்
தாராளம்
பார்த்தவை படித்தவை
பிடித்தவைகள்
ஏராளம் தாராளம்
அத்தனையும் தனதாக்கி கொண்டது
நம்மை-தனிமை
ஆட்கொண்டது!

உறவினர்கள் சந்திப்பு
நட்புடன் அரட்டை
அத்தனை யும்
குறைந்துவிட்டது
அது வழியே பேசி
குறைத்து விட்டது!
உலாவ போகும்போதும்
ஊருக்கு போகும் போதும்-அது
உறுதுணையாய்
பயம் நீக்கி வழி துணையாய்...
பக்கத்து மனிதர்களை
கூட பார்க்க மறுக்கும்!
பசி தூக்கம் மட்டும்
வராது போனால்
பாதி பேர் அதனுள்
மூழ்கிச் சாவார்!

நன்மை வுண்டு எண்ணிக்கை யில்
அது வளரும் தன்மை
கண்டு என்னுகேயில்
எங்கே செல்கிறோம்
மனம் ஏங்கிச் சொல்கிறோம்
தேவை தான் கைபேசி!
பொழுது போக்கு சாதனமாக இல்லாது போனால்...
இயற்கை யாய் இழப்போம்
நம் சுயத்தை
நம் சுகத்தை
இயல்பின் ரசனையாய்
இன்னொரு அன்பாய்
ஆண்டாராய்டா போனால்...
அடுத்த தலைமுறை
தாங்காது-சந்திக்கும்
தலைகுனிவை!

காதல் வாகனமாய்
கைபேசி தூதாய்
காரியம் சாதிக்க லாம்
கற்பனை போதிக்கலாம்
கற்பிதம் கஷட்ங்கள்
பின் தெரிவிக்கலாம்...
மண் பயன்வுறாது
பயிர் வளம் தாராது
வாலிபம் தளர்ந்தே
வாழ்க்கை துவர்க்கும்...

தேவை உணர்ந்து
உபயோகித்தால்
அவசியத்திற்கு
அவசரத்திற்கு...
அதி முக்கியம்-அது
பிழையாகாது!
அதிகம் பிழை நிகலாது
பொழுது போக்கியாய்
பொழுதும் அதில் போக்கினால்
மதி மயங்கி
மனம் சுருங்கி
எருக்கம் தலை ஏறாது
அது சூடாது
நாணல் நிழல் தாராது!
நாகரிகம் அது வென்றால்-முழு
நன்மைதான் வாராது!
கைபேசி அது வரம்
நீ நேசி
காலத்தின் கட்டாயம்
அதை நீ யோசி!
நம் சுயத்தை
பிற சுகத்தை
மனித நேயத்தை...
மறவாது இருப்போம்
அதனால்-
இறவாது இருப்போம்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1