நேற்றைய...

நிகழ்வுகள்
கழிவுகளாய்
கசடுகளாய்-தங்கி
கற்பித்தவை ஏராளம்!
மறந்ததை நினைத்தும்
நினைத்ததை மறந்தும்
மறுக்கப் பட்டவை
சூழல் மாறப்பட்டவை
நாம்-
மாற்றப்பட்டதை
மனம் பேசப்பட்டவை
கொஞ்சம் அள்ளி
மற்றதை
புறந்தள்ளி...
விடியலுக்கு வழித் தேடி(ட)
புறப்பட்ட வேளை!
எள்ளி நகைத்தோரை
இடந்தள்ளி
இடர்கடந்து
உடற்தளர்ந்து
போனப்பின்...
உண்மை உணர்த்தும்
ஊமையாய்
செவி மறுத்து
உயர்ந்த போதும்-இத
உயர்வில்லை
இன்னும் உயரவில்லை
என உணர்த்தும்
மன திருத்தும்
திட்டி வருத்தும்
நேற்றைய நிகழ்வுகள்...
நெஞ்சினில்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1