நினைவிடம்...!

வேண்டாமே இது!
மனம் வேகுது
நெஞ்சு குமுறுது
அஞ்சி அலறுது
பொறுக்கு தில்லையே
இது-
வெறுப்பின் எல்லையே!

அரசே!
நீங்கள்-இது வரை
பெரிதாக ஏதுவும்
செய்யவில்லை...
தயவு செய்து-இதைப்
பெரிதாக
செய்துவிடாதீர்கள்!

ஜெ.ஜெ.க்கு சாமதி
50 கோடி யில்...
இறந்தவர் நினைவு
இருக்கட்டும்!
இன்றைய நிலைமையும்
நினைவில் இருக்கட்டும்!
மூன்று லட்சம் கோடி
கடன்-தமிழகத்திற்கு!
நம்-தன்மானத்திற்கு!
இது(வும்) அவசியமா?!
சொல்லுங்கள் அரசே
சொல்லுங்கள்...
அவசியமென்றால்
செய்யுங்கள் இப்படி...

சொந்த இடத்தில்
சின்னதா(ய்)
ஒரு மருத்துவ கல்லூரி
அவர் பெயரில்...
நதிகளை இணையுங்கள்
ஒர் ஆராய்ச்சி கூடம்
ஆதரவற்ற ஆனாதை
இல்லம்...
கட்டுங்கள் அந்த
அம்மாவின் பெயரில்
எத்தனையோ வழிவுண்டு
அவரை நினைக்க...
ஆனால்-இது
பார்க்க பார்க்க
அவரை வெறுக்கும்!
உமிழ் நீர் முழுங்கி
அறுவருக்கும்...
உமது அரசை!

இது எங்கள் வரிப்பணம்
வருங்கால
நெறி பயணத்திற்கு!
பால் இல்லா பிஞ்சுகள்
பலன் இல்லா நஞ்சைகள்...
வாட்டுகிறது நெஞ்சை!
காட்டுகிறது மனதில்
நஞ்சை...

வேலையில்லா பேருக்கு
ஒரு ஆலை கட்டுங்கள்
சாலை யில்லா ஊருக்கு
சிறு சாலை போடுங்கள்!
தயவு செய்து
எங்கள் வரியை
வீணாக்காதீர்கள்...
அல்லது-அடுத்த
ஐந்தாண்டுக்கு
வரி போடாதீர்கள்!

முன் மாதிரியாக
இருங்கள்...
இன்னும்-
முன்னே மாதரியே
இருக்காதீர்கள்!
பின் விளைவுகள்
பெரிதாகும்! - இன்னும்
இங்கு தலைவர் கள்
பலர் உண்டு!
தயவு செய்து
உங்கள் முயற்சியை
தடைசெய்யுங்கள்
அல்லது
தமிழகத்தில்(ன்)
வேண்டாத ஆனியாய்
போவீர்கள் நாணி...

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1