அம்மா!

அம்மா!
ஆச்சரியம்,அன்பு
அடக்கம்,ஆருயிர்...
ஆனந்தம்!

அம்மா!
சொல்லும் போதும்
மட்டுமல்ல...
நீ!
இருக்கும் வரை
உன் மடிதான்...
சொர்க்கம்!

நீ!
இறக்கும் வரை
தெரியவில்லை
உனக்கும் எனக்கும்
உயிர்- வேறு
வேறு என்று!

வேதனை தீயில் அன்று
நீயும் நானும்
தனித்தனியாக..
நீ வெந்தாய்
நான் நொந்தேன்!

சீராட்டி பாலுட்டி
பாச மது யூட்டி
சோறுட்டி சுகமூட்டி...
கைப்பிடித்து நடைபயில
இன்சொல்லி மொழிபயில
என் ஆசானும் நீயே
அதிகாரமும் நீயே!

பருவத்தில் கர்வமகற்றி
இளமையில் வளமைச்
சேர்த்த
கருணை இல்லம்-அது
கடவுள் உள்ளம்...!

காசு இல்லாத போதும்
மனம் கடவுளை நாடாத
போதும்...
மடிமீது துயில வைத்து
மனக்கவலை
மறக்க வைத்து-
மந்திரம் சொல்லா எந்தரம்...
என் சாமி நீ!

நீ!
இருக்கும்வரை
கோவிலுக்குச் செல்லவில்லை
அதன்பின்-
எந்த கோவிலுக்குச்
சென்றாலும்...
நீ அங்கு!

சத்தியமாய் சொல்கிறேன்-உன்
பிரிவு கஷ்டமில்லை!
பிரிந்ததாய் நான்
நினைக்கவில்லை!
என்னுள் நிறைவாய்
நெருக்கமாய்
நிதர்சனமாய்...
ஆசனம் போட்டே
அதே சிரித்தமுகத்துடன்!
உன்
நினைவு நாள் மட்டும்
நினைவுப்படுத்தும்
நீ! இல்லை என்று...

வெகுதூரப்பயணமாய்
மனம் எண்ணும்(என்றும்)
மறந்து உண்ணும்!
இறவா நிலை
இறை வா நிலை
இது தானோ...
அம்மா!


தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1