எனக்கு நீ...

எனக்கு நீ - இனி
உனக்கு நான்!

நான் உனக்கு
நீ எனக்கு - இனி
இல்லை பிணக்கு...
உண்மையா இருப்போம்
சேர்ந்தே - ஓர்
ஆதரவுடன்!

உறவு கண் கலங்கும்
ஆணந்தமாய்!
உற்றார் கண்படும்
ஆர்வமாய்!
ப்ரியத்திற்கு பிரிவில்லை
சினேகம் சிலந்தியாய்
 வலைப் பின்னும்...
கலை மின்னும்!

சாத்தியமா! - அது
சந்தேகமில்லே
சத்தியமா-நித்தியமது!
பயமின்றி உணர்வோம்
தடையின்றி உரைப்போம் உரையாடுவோம்!
கலை யோ பிழையோ
பந்தமோ பாசமோ
பந்தையமோ விந்தை யகமோ...
கட்டிலில் விவாதிப்போம்! பின்-
விலகாது இருப்போம்
மனதால்...!
விவா(க)த பொருளிட்வோம்
காலை மட்டுமல்ல
வருங்காலத்தில் கூட...!

கண்ணீர் இல்லை-மாசு
கலப்பட மில்லை
கலக மில்லை-மனசு
கவலை யில்லை!

இதில் கஷ்ட
மொன்று மில்லை
கடைப் பிடிக்க
தடை விதிக்க...
தப்பிச் செல்ல!

ஊனும் சோறும்
உலர் பழச் சாறு
மட்டும் உணவல்ல
உண(ர்)வில் கொள்ள
அதுவும்-
இடைச் சேரும்!

பொய்மை கையமை
போர்த்த வில்லை
தயக்கம் ஏக்கம்
துக்கம்-தூக்கப்
போர்வையு மில்லை
இடைப் படர-அதற்கு
இட(மே) மில்லை...!

லட்ச மலரில்
லட்சிய மலராய்
பார்த்து வைத்தோம்
முகர்ந்து நின்றோம்
முழுவது முண்டோம்
முழுமை கண்டோம்!

காயில்லாக் கனியா
கிளை யில்லா இலையா
வேரில்லா மரமா
 நீரில்லா மச்சமா!
நீ யில்லா நானா
நானில்லா நீயா!?
வேறு என்ன மிச்சமா. 

போர்ப் புரவி
நீர் அருவி
வேர் பரவி
ஊர் மறுவி
உறவு தழுவி
உயர் காண்போம்
முன்னோர் களது
பெயர் காப்போம்!!

இல் வாய்ப்புக்கு
நல் வாழ்த்துக்கு
நன்றி யாய்
வணக்கங்கள் பல
வணக்கத்துடன்
 நன்றி பல...!

வாழ்க வளர்க
வளமுடன் நலமுடன்
எல்லோரும்... எப்போதும்!
என்றென்றும்!!
அன்புடன்.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1