பன்னிரு கைகளிலே
உன்னிரு வழிகளிலே...
உலகை காத்தாயே
எம்மையும் பார்த்தாயே
முருகா!

முக ஆறு- வாராது
அக கோளாறு -
உனைப் பார்த்தால்
அது வரலாறு!
குன்றிலே நின்று
மனக் குறைகளைக்
கொன்று...
கன்றினைப் போல்
இன்றும் எனைக்
காத்தாய் சுகம் சேர்த்தாய்!

அழகு முகம் கொஞ்சி
தமிழோடு கெஞ்சி
பார்ப்பன அஞ்சி
பயந்தன நெஞ்சி
தயங்கினேன் வாழ்க்கையில்...
வாழு கையில்!
துடைத்தெடுத்தாய் எனை தூக்கிவளர்த்தாய் மனந்
தாங்கிபிடித்தாய் தளிராய் வளர்த்துவிட்டாய்...

வாழ்வியல் வாழுமுறை
அஞ்சி யல்ல- எதையும்
விஞ்சி - நன்மைக்கே
வெற்றி யில்லை
வேதனையில்லை
வெற்றிடமாய் - மனம்
போனதங்கை ! இனி
எஞ்சிய தெல்லாம்
மிஞ்சும்...
துயர் துடைத்து
துஞ்ச அருளிய
அருட்பா!
நானும் ஆளானேன் உன்
பொருட் பா!
முருகா!

எனைச் சுற்றியே- நீ
ஐங்குறு குன்றாய்
குறுமலையாய்
பெரும் பலமாய்
நின்றாய் எம்மை
வென்றாய்
காத்திட நின்றாய்!
சென்னிமலை சிவன்மலை
அழகுமலை
படைவீட்டில் ஒன்றாய்
பழனி மலை
பக்கத்தில் ஏழாவதாய்
மருதமலை எம்மை
மயக்கும் மலை!

எனக்கு பயமென்று
ஏதுமில்லை...
நீ இருக்க!
என் பயண மொன்றும்
கஷ்டமில்லை
என் நன்னீரும்
செந்நீரும் காப்பது
உன் திரு நீரே!
தைப் பூசத் திருநாளில்
மனப் பூசை காண்பேன்
உன் மணியோசை
கேட்பேன்
இனி ஆசை வெல்வேன்
உன்-ஒத்தாசைக்
கொண்டே!
ஒம் முருகா!
ஆம் அழகா!!
எம் வேலா!!!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1