போராட்ட நினைவுகள்...!
கடந்த வருடம்
மனித கிரிடம்
மகுடமாய்...!
சரித்திர சாதனையாய்
நிகழ்ந்த-நிகழ்த்திய
கடலென...
கடலோர கருந்தலைகள்!
இத்தின நிகழ்வுகள்
இரத்தின மணிகளாய்
அணிவகுத்த அற்புதங்கள்...
சந்தித்த வேளை
சிந்திக்கவே இல்லை
வந்துவிட்டோம்...
நம்மை தந்துவிட்டோம்!
வாடிவாசலை திறக்கும்வரை ...
வெறும் வார்த்தை மட்டுமல்ல
தமிழர் வர்க்கத்தை
இன-நெருக்கத்தை
காட்டியவை-அலையென கூட்டியவை கூடியவை!
கண் மறக்க வில்லை
கண்ணுக்கு யெட்டிய வரை -தலை மறையவில்லை!
மார்க்கம் குறையவில்லை
போர்குணம் மறக்க- வில்லை
வெயில் பனி பாரா-எம்
தம்பி தங்கை-கள்
வெருந் தரையில் படுத்தே
வீரமுழக்கம் தொடுத்தே
ஜாதி மதம் மறந்து
இனம் சார்ந்து இனைந்தன
பசி தூக்கம் துறந்தே
ஜல்லிக்கட்டுக்காக...
துள்ளிகிட்டு வந்த கூட்டம்!
துளி கூட வருந்தாத நாட்டம்
தீட்டாத திட்டமொன்று
மெரினா திடலில்!
வீரம் விளைஞ்ச மண்ணு
ஈரமாச்சு கண்ணு
நெஞ்சுக் குழி வேர்க்குது
அடிவயிறு அணலாய்...
வேதனையில் மறுத்த
நெஞ்சு
வேறு எதையும் நினைக்கலயே!
ஒரு தலைவன் யில்லா
தலைமை!
திரு தமிழன் இனங்
காத்த நிலைமை!
தயா குணம் நீர்
கொடுத்த கொடை
குப்பை கூழம் ஏதுமில்லா கட்டி காத்தப்படை!
வெஞ்சினம் கண்ணில்
அஞ்சினோம் உன்னில்
ஒற்றுமையாய் மண்ணில்
உணர்வு காத்தாய்
உரிமை கோர்த்தாய்
உண்மை சார்ந்தே
மீட்டெடுத்தாய்!
எம் மொழி
எம் இனம்
நம் உணர்வு அது
நம் உயர்வு!
பகுத்திட்டாய்
பாதை யிட்டாய்
நம் இனம் வீழாது
இனி சாதிக்காமல்
மாளாது!
தமிழன் சாதிக்கப் பிறந்தவன்
ஆதிக்கம் படைத்தவன்
சரித்திரம் படைப்பவன்
படைத்தவன்-இன்னும்
படைப்பான் - அவன்
தமிழன் என்று சொல்லடா ...
தரணி அதை வெல்லடா!
சத்தியமாய் சொல்கிறேன்
சத்தியாகிரகம் படித்ததுண்டு
பார்த்ததில்லை ... அதுவரை!
சாதிக்க ஏதும் தேவையில்லை
மன உறுதி
மரணமே இறுதி
மார்தட்டிய எம் மாணிக்கங்கள்!
ஆயிரம் தவறுகள் நாம் செய்தோம்...
ஆனால்-
கோடி தவம்-ஆம்
புரிந்தோம்!
கலாச்சார பண்பாடு
பயன்பாடு-உடன்
பயணப்படு...
வீரப் பயணமாய்
மனித எழுச்சி
தமிழன் முயற்சி
கண்டவர்களுக் கெல்லாம் அயர்ச்சி
எம்(நம்)மனக் குளிர்ச்சி
இனி நாதியில்லை
என வாதிட ஏதுமில்லை
பார்-இதை
போதுமில்ல...
பறைச் சாற்றி(ய)
பகிர்ந்தளித்த உங்கள்
ஒற்றுமை க்கு
மண்டியிட்டு வணங்குகிறேன்..
மறுபடியும்
வாழ்த்துகிறேன்!!
மனித கிரிடம்
மகுடமாய்...!
சரித்திர சாதனையாய்
நிகழ்ந்த-நிகழ்த்திய
கடலென...
கடலோர கருந்தலைகள்!
இத்தின நிகழ்வுகள்
இரத்தின மணிகளாய்
அணிவகுத்த அற்புதங்கள்...
சந்தித்த வேளை
சிந்திக்கவே இல்லை
வந்துவிட்டோம்...
நம்மை தந்துவிட்டோம்!
வாடிவாசலை திறக்கும்வரை ...
வெறும் வார்த்தை மட்டுமல்ல
தமிழர் வர்க்கத்தை
இன-நெருக்கத்தை
காட்டியவை-அலையென கூட்டியவை கூடியவை!
கண் மறக்க வில்லை
கண்ணுக்கு யெட்டிய வரை -தலை மறையவில்லை!
மார்க்கம் குறையவில்லை
போர்குணம் மறக்க- வில்லை
வெயில் பனி பாரா-எம்
தம்பி தங்கை-கள்
வெருந் தரையில் படுத்தே
வீரமுழக்கம் தொடுத்தே
ஜாதி மதம் மறந்து
இனம் சார்ந்து இனைந்தன
பசி தூக்கம் துறந்தே
ஜல்லிக்கட்டுக்காக...
துள்ளிகிட்டு வந்த கூட்டம்!
துளி கூட வருந்தாத நாட்டம்
தீட்டாத திட்டமொன்று
மெரினா திடலில்!
வீரம் விளைஞ்ச மண்ணு
ஈரமாச்சு கண்ணு
நெஞ்சுக் குழி வேர்க்குது
அடிவயிறு அணலாய்...
வேதனையில் மறுத்த
நெஞ்சு
வேறு எதையும் நினைக்கலயே!
ஒரு தலைவன் யில்லா
தலைமை!
திரு தமிழன் இனங்
காத்த நிலைமை!
தயா குணம் நீர்
கொடுத்த கொடை
குப்பை கூழம் ஏதுமில்லா கட்டி காத்தப்படை!
வெஞ்சினம் கண்ணில்
அஞ்சினோம் உன்னில்
ஒற்றுமையாய் மண்ணில்
உணர்வு காத்தாய்
உரிமை கோர்த்தாய்
உண்மை சார்ந்தே
மீட்டெடுத்தாய்!
எம் மொழி
எம் இனம்
நம் உணர்வு அது
நம் உயர்வு!
பகுத்திட்டாய்
பாதை யிட்டாய்
நம் இனம் வீழாது
இனி சாதிக்காமல்
மாளாது!
தமிழன் சாதிக்கப் பிறந்தவன்
ஆதிக்கம் படைத்தவன்
சரித்திரம் படைப்பவன்
படைத்தவன்-இன்னும்
படைப்பான் - அவன்
தமிழன் என்று சொல்லடா ...
தரணி அதை வெல்லடா!
சத்தியமாய் சொல்கிறேன்
சத்தியாகிரகம் படித்ததுண்டு
பார்த்ததில்லை ... அதுவரை!
சாதிக்க ஏதும் தேவையில்லை
மன உறுதி
மரணமே இறுதி
மார்தட்டிய எம் மாணிக்கங்கள்!
ஆயிரம் தவறுகள் நாம் செய்தோம்...
ஆனால்-
கோடி தவம்-ஆம்
புரிந்தோம்!
கலாச்சார பண்பாடு
பயன்பாடு-உடன்
பயணப்படு...
வீரப் பயணமாய்
மனித எழுச்சி
தமிழன் முயற்சி
கண்டவர்களுக் கெல்லாம் அயர்ச்சி
எம்(நம்)மனக் குளிர்ச்சி
இனி நாதியில்லை
என வாதிட ஏதுமில்லை
பார்-இதை
போதுமில்ல...
பறைச் சாற்றி(ய)
பகிர்ந்தளித்த உங்கள்
ஒற்றுமை க்கு
மண்டியிட்டு வணங்குகிறேன்..
மறுபடியும்
வாழ்த்துகிறேன்!!
Comments
Post a Comment