உலக அழகி!

மனுஷி சில்லர்...


அரியானா தந்த அற்புதமே!
அனேக கோடியில்
ஓர் பதமே...

அள்ளி தந்த-
வான் வெள்ளி!
உன் பெயர்
சொல்லி...

சந்தை யேரும் - இனி
விந்தையாகும்
வந்தேயாகும்...
ஒவ்வொரு பொருளும்!

மானுடல் மகுடத்தின்
மகிமை நீ...
மனுஷி சில்லர்!
ஒரு தினுசாய் சொல்லுவர்- உனை!

மறுக்கவில்லை மாற்று
கருத்துமில்லை-இனி
உன் உயர்வுக்கு-இந்த
அழகே! ஆதாரம்...

ஆயுர்வேத மருந்தைப்
போல் அழகியும்
இங்கிருந்தான் உற்பத்தி...
போற்றுவாய் தேசப் பக்தி!
 நேசம் கருதி!

ஏற்றுமதியோ
இறக்குமதியோ
என்னச் செய்வார்களோ
உனை...

ஆனால்-நீயும்
எங்கள் நிதி!
நல் யுவதி...

உலக அழகிப் பட்டம்
சிறிது காலம்
உன் பெயர்
விண்ணை முட்டும் -உன்
கண்ணைக் கட்டும்!

தன்னார்வத் தொண்டு
தானாய் வளரட்டும்...
விளம்பரத்திற்கு வேண்டா!

இனி ஒரு படமோ
பதவியோ உனை
கவனிக்க காத்திருக்கும்
கவலை வேண்டா

இனி-காதலும் காலமும்
உனை வேண்டி நிற்கும்...
அதை(யும்) பொறுத்தாளுவோம்
உன் பெருமையைப் போற்றி!
பெரும் தீபமாய் ஏற்றி!

பெரும் மரியாதைக்கு
உரியவளே...
இனி-மரியாதைக்குரிய
காரியங்களை மட்டும்
செய்!
தாராளம் யென்ற
பெயரால் தரம்
தாழ்ந்து விடாதே!

பெருமைக்குரிய பெண்ணே
போற்றுவாம் பென்மையை...
மறந்துவிடாதே இவ்
உண்மை யை!!

வாழ்த்துக்கள் யுவதியே
புதுச் செய்தியே!

     

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1