உன் கண்கள்...!
உன்
கண்கள்
காவியம் பேசும்
காரியம் சொல்லும்
ஒவியம் போடும்
கோலமிடும்...
நிழலாய்!
நினைவாய்...
உன் கண்கள்
நேர் பார்க்கும்
கூர் நோக்கும்
சுகந் தேக்கும்
சுபம் பாடும்!
காதலாய்...
உன் கண்கள்!
விரியும் ஆச்சரியமாய்
சுருங்கும் ஆணவமாய்
நீர் பெருக்கும்
நிதானம் பேசும்!
நிதர்சனமாய்...
உன் கண்கள்
பயப்படும்
பளபளக்கும்
சலசலக்கும்-அவை
கலகலக்கும்!
இயல்பாய்...
உன் கண்கள்
வலி தாங்கும்
வழி பார்க்கும்
கிலி யூட்டும்
மொழி பேசும்!
மௌனமாய்...
உன் கண்கள்
சிவக்கும்
முறைக்கும்
தகர்க்கும்
தவிர்க்கும்!
சினத்தால்...
உன் கண்கள்
கெஞ்சும் கருணையால்
கொஞ்சும் மழலையாய்
மிஞ்சும் பரவசத்தால்
அஞ்சும்!
பயத்தால்...
உன் கண்கள்
கேலி பேசும்
ஒரு கண் சுருக்கி
கேள்வி கேட்கும்
மறுகனம் பெருக்கி
வேள்வி செய்யும்!
வேதனை யாய்
வேடிக்கையாய்!
கண் மூடி...
உன் கண்கள்
மாசு போக்கும்
நேசம் காக்கும்
பாசம் போற்றும்
நவரசமாய்
நயம் பாடும்!
சுயம் பேணும்...
உன் கண்கள்
நிறம் மாறும்
நிஜம் பேசும்
நீர் ஊற்றும்
பார்வை மாற்றும்!
என்றும் மாறாதது
உன் கருவிழி மட்டும்!
எனக்குள் மறக்காதது
உன் கயல்விழி மட்டும்...
This comment has been removed by the author.
ReplyDeleteKangal ivlo seiyuma👀👏👏👏
ReplyDelete