பாலி ஒரு தீவு...!

பாலி ஒரே தீவு...!

இந்தோனேசியா
மிகப்பெரிய இஸ்லாத்தை போற்றும்
நாடு!
இஸ்லாமியர்கள் படையெடுப்பு க்கு பின்...
அதற்கு முன்
இந்துக்கள் நேசித்த
இந்துக்கள் மட்டும் வசித்த-சுவாசித்த நாடு!

மதம் மாற்றினார் கள்
மனம் மாறினார் கள்!
மாறியவர்களும்-மதம்
தாவியவர்களும் தான்
இன்று அங்கு...
மிகப்பெரிய இஸ்லாமிய நாடு!

கடைசி யாக ஆண்ட
இந்து மன்னன்
மஜாபஹிட்!
மன்னர் வீழ்ந்த பின்னர்
மதம் மாறாத
மனம் மாறாது-
இருந்த மக்கள்
இயல்பாய் இருக்க எண்ணி-இந்துவாக
அங்கிருந்து ஓடினர்
புகழிடம் தேடினர்...
தேடலின் தீர்வு-அது
பாலி யென்னும் தீவு!

அரங்கேறினார்கள்-பின்
ஒருங்கிணைந்தார்கள்
இந்துவாய் மிகப்பெரிய
பந்து வாய்!
மிகப்பெரிய குடியரசின்
ஒரு தனி சிரசு!
எத்தனை யோ ஆயிரம்
தீவுகளில் பாலி...
ஆயிரத்தில் ஒன்று!
ஒற்றுமை யில் நன்றாக
தொன்னூறு சதவிகித
மக்கள்-இந்துக்கள்!
 ஒற்றுமையின் பந்துகள்
மீதம் மற்ற மதம்
மாற்றும் விதம் யில்லை
மத பிரிவினை யில்லை
மாற்ற போதனைகள் இல்லை!

அழகின் எழுச்சி
அதுவே வளர்ச்சி -முக்கிய வர்த்தகம்
வந்து போவோர்கள் தான்-சுற்றுலா!
தொழில் விவசாயம்
நெற் பயிர்...
அதிக மகசூல்
அக்கறை யென்ற சொல்!

ஒன்பதாம் நூற்றாண்டில் முன்னோர்கள்
சொல்லி கொடுத்த
நீர் பாசனம் திட்டம்!
நீங்காது வசிக்கும் சட்டம்! - அது
சுபாக் சிஸ்டம்!
நீர்பாசனம் அங்குள்ள
பூசாரிகள் பராமரிப்பு...
கோவில் பூசாரி களுக்கு
அரசு சம்பளம்!
மற்ற மத பூசாரிகளுக்கும்...
ஒரு இஸ்லாமிய நாட்டில் இது...
மிகப்பெரிய பாராட்டுகள்!

இந்துக்களின் கலாச்சாரம்-அங்கு
ஒங்கி காணப்படும்
இராமாயணம் மகாபாரதம் பெரும் மதிப்பு
பண்டிகை காலங்களில்
இரு இதிகாச த்தை
சுற்றியே
நடனமும் நாடகமும்!
பாலி நடனம்
பார்க்க இனிது!

தேசிய உடை
வேஷ்டி யே!
ஆண் பெண் இருவருக்கும்
கோவிலுக்குச் செல்ல!
மந்திரங்கள் எல்லாம்
ஏடுகளில் தான்...
சூரிய நமஸ்காரம்
அதி முக்கியமான ஒன்று!
தினசரி மூன்று வேளை
மந்திரங்கள் ரேடியோ விலும் ஒலிக்கும்!
ரிஷிகளும் முனிவர்களும்
நல்ல அறிமுகம்
பாடங்களிலும் பாடல்களிலும்
அறிந்த முகம்!

அறுவடை சமயத்தில்
நெல் படைத்து
வணங்குவார்கள்
ஶ்ரீ தேவிக்கும்
பூமா தேவிக்கும்!
வருடம் ஒருமுறை
ஒருநாள் அனைவரும்
மௌன விரதம்
மார்ச் திங்களில்!
காலை முதல் மாலை வரை...
அரசு விடுமுறை அன்று
எதுவும் இயங்காது...
சர்வதேச விமானத்தளம்
தலை நகரில்
தென்பசார்!
அதுவும் இயங்காது!

பாலியின் சமூக
பொருளாதார அரசியல்
கட்டமைப்பு அனைத்தும்
ரிஷிகள் மொழிந்து தான்
அவர்கள் வகுத்தவை
இன்றும் தொகுத்து
காப்பவைகள்!

இந்து கலாச்சார மே
ஓங்கி அங்கே
வெற்றி கண்டுள்ளது
அதை தாங்கி!
இந்தோனேசியா
இஸ்லாம் தேசந்தான்
அதில் பாலி
புது வசந்தம் தான்
இந்துக்களின் வாசம்
அதனால் என் நேசம்
இது-
நான் பார்த்தது அல்ல
படித்தது!
மனசுக்கு பிடித்தது...

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1