விதியே! உன் விலாசம் என்ன?
விதியே!
உன் விலாச மென்ன?
கொஞ்சம் சொல்லேன்...
விரைந்தோடி
விசாரித்து வருகிறேன்!
நீ
விளையாடிவிட்டுப் போன
எத்தனையோ
மைதானத்தில்
தவித்து நிற்கும்
தவிர்த் திருக்கும்
கோடியில் நானும்
நிற்கிறேன்
கடைக் கோடியில்...
எத்தனை ஏற்றம்
எத்துனை மாற்றம்
என்னுள்-
அத்துனைக்கும் நீ(யே)
காரண மெனில்-இங்கு
நான் யார்?!
எதற்கு எம் மதி
எங்கே வைத்தாய்
என் நிம்மதி!
ஒரு முறை உன்னைச்
சந்திக்க சம்மதி!
அன்றைய என்
கோபத்திற்கு-இன்று
பழிவாங்குதல்...
அன்றைய ஏமாற்றத்திற்கு
இன்றைய விலை...
என்ன நிலை!-இது
என்னுள் உனக்கு
என்ன லீலை
உன்னிடம் என் கணக்கு!
நிறைய நிகழ்வுகள்...
ஒரு சந்திப்பு
ஒரு சந்தோஷம்
ஒரு விலகல்
ஒரு சங்கடம்
தொடர் மகிழ்ச்சியாய்
நல்ல தெல்லாம் நாட்களில்
தொடர் இகழ்ச்சி
துயரம் துன்பம்
கலக்கம் கலகம்
கஷ்டங்கள் யெல்லாம்
பல மாதங்களில்...
ஏன் இந்த லாஜிக்
என்னால் அறிய-
முடியவில்லை
உன் மேஜிக்!
கடனாய் கஷ்டத்தை
நிவர்த்தி செய்து
கடனையும் கஷ்டத்தையும்
தினம்
நெய்வேத்தியம் செய்கிறாய்!
தினம் நீ
என்னுடனா...
தோளிலா
நெற்றியிலா
உடல் கழுவி
உனை இறக்கி
ஆடை மாற்றியும்
பின்-எப்படி நீ
என்னுடன்!
உன் முகம் பார்த்து
முறை யிட விரும்பும்கிறேன்
உன் முகவரிச்
சொல்லேன்...
வியாபாரத்தில் விழுந்தாலும்
வியாக்கியான மற்று
இருந்தாலும்
விபர மற்று
தோற்றாலும்
பற்று பாசம்
வைத்தாலும்
பற்ற யற்று
போனாலும்
விதிப் பயன்-என
உன் பயன் சொன்னால்
என்னப் பயன்-என்
முயற்சிக்கு!
ஏது பயன் -என்
பயிற்சிக்கு!
வயோதிக அயர்ச்சி
எனக்குள்...
நான் தளர்ச்சியில்
தள்ளாடும் முன்-உன்
விலாசம் சொல்லேன்
விசாரித்து வருகிறேன்!
உன்னிடம் சில
கேள்விகள்...
என்னிடம்!
இப்படியே வா
சாய்ப்பாய் என்னை
மண்ணிடம்!
உன்னை மறக்க மாட்டேன்
வெறுக்க(வும்) மாட்டேன்
ஆனால்-
பொறுக்க மாட்டேன்
இது தொடர...
மாற்றம் காண
மன வேதனை மாற
மறைக்காமல் சொல்லேன்
உன் கதவு இலக்க
எண்ணுடன்
முடிந்தால் வருகிறேன்
உனைத் தேடி...
அதற்குள் ஓடி விடு
என் முக வரித்
தாண்டி!
உன் விலாச மென்ன?
கொஞ்சம் சொல்லேன்...
விரைந்தோடி
விசாரித்து வருகிறேன்!
நீ
விளையாடிவிட்டுப் போன
எத்தனையோ
மைதானத்தில்
தவித்து நிற்கும்
தவிர்த் திருக்கும்
கோடியில் நானும்
நிற்கிறேன்
கடைக் கோடியில்...
எத்தனை ஏற்றம்
எத்துனை மாற்றம்
என்னுள்-
அத்துனைக்கும் நீ(யே)
காரண மெனில்-இங்கு
நான் யார்?!
எதற்கு எம் மதி
எங்கே வைத்தாய்
என் நிம்மதி!
ஒரு முறை உன்னைச்
சந்திக்க சம்மதி!
அன்றைய என்
கோபத்திற்கு-இன்று
பழிவாங்குதல்...
அன்றைய ஏமாற்றத்திற்கு
இன்றைய விலை...
என்ன நிலை!-இது
என்னுள் உனக்கு
என்ன லீலை
உன்னிடம் என் கணக்கு!
நிறைய நிகழ்வுகள்...
ஒரு சந்திப்பு
ஒரு சந்தோஷம்
ஒரு விலகல்
ஒரு சங்கடம்
தொடர் மகிழ்ச்சியாய்
நல்ல தெல்லாம் நாட்களில்
தொடர் இகழ்ச்சி
துயரம் துன்பம்
கலக்கம் கலகம்
கஷ்டங்கள் யெல்லாம்
பல மாதங்களில்...
ஏன் இந்த லாஜிக்
என்னால் அறிய-
முடியவில்லை
உன் மேஜிக்!
கடனாய் கஷ்டத்தை
நிவர்த்தி செய்து
கடனையும் கஷ்டத்தையும்
தினம்
நெய்வேத்தியம் செய்கிறாய்!
தினம் நீ
என்னுடனா...
தோளிலா
நெற்றியிலா
உடல் கழுவி
உனை இறக்கி
ஆடை மாற்றியும்
பின்-எப்படி நீ
என்னுடன்!
உன் முகம் பார்த்து
முறை யிட விரும்பும்கிறேன்
உன் முகவரிச்
சொல்லேன்...
வியாபாரத்தில் விழுந்தாலும்
வியாக்கியான மற்று
இருந்தாலும்
விபர மற்று
தோற்றாலும்
பற்று பாசம்
வைத்தாலும்
பற்ற யற்று
போனாலும்
விதிப் பயன்-என
உன் பயன் சொன்னால்
என்னப் பயன்-என்
முயற்சிக்கு!
ஏது பயன் -என்
பயிற்சிக்கு!
வயோதிக அயர்ச்சி
எனக்குள்...
நான் தளர்ச்சியில்
தள்ளாடும் முன்-உன்
விலாசம் சொல்லேன்
விசாரித்து வருகிறேன்!
உன்னிடம் சில
கேள்விகள்...
என்னிடம்!
இப்படியே வா
சாய்ப்பாய் என்னை
மண்ணிடம்!
உன்னை மறக்க மாட்டேன்
வெறுக்க(வும்) மாட்டேன்
ஆனால்-
பொறுக்க மாட்டேன்
இது தொடர...
மாற்றம் காண
மன வேதனை மாற
மறைக்காமல் சொல்லேன்
உன் கதவு இலக்க
எண்ணுடன்
முடிந்தால் வருகிறேன்
உனைத் தேடி...
அதற்குள் ஓடி விடு
என் முக வரித்
தாண்டி!
Nala karpanai
ReplyDelete