Zifo 10

Zifo10.

மார்ச் பத்து
அத்தினம் கெத்து
காரணம்-அன்று
ஜிபோ பத்து-க்கான
ஆண்டு இருப்பு
அடுத்தாண்டின் பிறப்பு
அதற்கான சிறப்பு
கொண்டாட்டம்!
மனசெல்லாம் வண்டாட்டம்...
சின்ன மலையில் ஓர்
சிற்றின்ப மழை!
அன்பால் அதன்பால்
தன்வீட்டு விசேடமாய்
கோவில் திருவிழாவாய்
பண்டிகை பற்றாய்
பதற்றமே யில்லா பயங்கரம்...
பார்த்தேன் வேர்த்தேன்
வியந்தேன்!

அரிதாரமின்றி
அறிமுக(மான) முகங்கள்-
புன்சிரிப்புடன்
புண்ணியம் செய்தவர்கள்
எழுதாத முக வரியில்
பூரித்த அகங்கள்!

நுழைவாயில் முன்
 அனுமதிச் சீட்டு-உடன்
வருகை கேட்டு...
வந்தோம் உள்
 மனந் தொட்டு!

அன்றாட தேவைக்கென
சேர்ந்த வேலை இல்லை
இது-
அறிவாளிகளின் அணிவகுப்பில் ஆணித்தரமாய்
 உணர்த்தியது!
பெரும் பகட்டு யல்ல
மிரட்டும் பொருட்டுமல்ல
எளிமைக்கு
வேலை யில்லை!

தேடலில் தேவைகளும்
தேவைக்கு தேடலும்
தென்றலாய் தெரிந்தது!

ஒருதாய் மக்களாய்
ஒருகூட்டுப் பறவைகளாய்
கூடி மகிழ்ந்தன
தேடி கலைந்தன!

முகம் மூடும் முறையில்லை
பிரித்தாளும் அறையில்லை
நால்வர் இருக்கை
நல்லவர் சேர்க்கை
நாகரீகமான நற்செயல்!

பதவிப்பெயர் ஒலிக்கவில்லை
இயற்பெயர் அழைக்க
மட்டும்
எழில் கொஞ்சும் ஏற்பாடு
எண்ணம் பேசியது பிற்பாடு!
அறியாத தன்
வேலையின் மரியாதே
தெரிவித்தது-இதற்கு
முன் அறியாததை
அழைத்து அறிவித்தது
அலுவலகம்!
அவ்வளவும் அழகுமயம்!
பண்பாடு கெடாமல்
பயன்பாட்டின் பயனை
அறிவித்தது தெரிவித்தது!
ஆங்காங்கு அறிவிக்க
வைத்தது
 தெரிவிக்க வைத்தது!

இளப்பாற ஓய்வறை
பொழுது போ(க்)க
விளையாட்டு...
மூளை கெடாது தேகம்
காக்க உடற்பயிற்சி அறை
இடைவிடாது முயற்சிகளை
 இறக்கி வைக்கும்
பயிற்சி கலை!

வரிசைக் கட்டும்
வண்ணத்துப் பூச்சிகள்
வாரிசு காட்டும்-அந்த
வண்ணச்சோலையில்
வர்ணஜாலம்...
நிலத்தில் நிஜத்தில்
நிலவாய் என் நினைவில்
நீங்காதவை!

இத்துனை தெய்வங்களா...
இக் கோவிலில்!
எண்ணற்ற வர்ணம்
ஏற்ற முற எண்ணம்
உயர் வது திண்ணம்!

பிற்பகல் ஆட்டம் பாட்டம்
முன் இரவு விருந்து!
அத்தனையும் அற்புதம்
அறிய ரகம்!
ITC-யின் அனுபவம்
முகர்ந்து - அது சந்தோஷ
மருந்து!

எங்கள் முயற்சி
 வீனாகவில்லை
நேரடி காட்சி...
உங்கள் பயிற்சி
வீனாக்கவில்லை
கண்டதே சாட்சி!

இன்னும் வளர்சி கானுங்கள்
இந் நிலை பேனுங்கள்!
வாழ்க வளர்க!
வாழ்த்துக்கள்!!

என்றும் அன்புடன்
தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1