வேலுநாச்சியார்!-2
அதில் ஒருவர்
தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்
பெரிய மருது!
மற்றொருவர்
அண்ணன் எவ்வழியோ
அவ்வழியே அறவழி-
என்ற சின்ன மருது!
இரு மருதும்
நாச்சியாருக்கு கிடைத்த
விருதுகள்!
காலைக் கதிரு
பொக்கிஷ குதிரு
இவர்கள்!!
உடன் இருந்தால்
உலகை விலை பேசலாம்...
வீரத்திலும் தீரத்திலும்
அலை வீசலாம்!
பயமில்லா விலாசம்
எங்கும் எதிலும்
இடதும் வலதுமாய்
வலம் வரும்-அவளது
சுவாசம்...
அந்த சுவாசத்தின்
விசுவாசத்தால் தான்
பின்னொரு நாள்
மன்னர் ஆனார்கள்!
அது தனிக் கதை...
படை புறப்பட்டது
தடை உடைக்கப்பட்டு
மூன்றாய் பிரிந்தனர்
முப்படையாய் பறந்தனர்
திருப்பத்தூருக்கு ஒன்று
அதில் வெற்றி கண்டு
காளையர் கோவிலுக்கு
ஒன்று - அங்கும்
தோல்வி யில்லை!
மற்றொன்று சிவகங்கை க்கு
மக்கள் கிளர்ச்சி வுடன்
அதீத முயற்சி வுடன்
சீக்கிரத்தில் கரம் பற்றியது - வெற்றி
சுரம் முற்றியது!
நவாப் படைகள்
நசிந்து போனது
பரங்கியர் படை
பறந்து போனது
சிவகங்கை யை
மறந்து போனது
நாச்சியாரை
நினைந்து போனது!
இவள் பெண் அல்ல
வேங்கை!
இத்தனை நாட்கள்
பதுங்கியது இந்த
பாய்ச்சலுக்குத் தானா!
ஊரே தகைச்சு போனது
ஒரே பேச்சாய் போனது!
அவள் வீரத் தமிழச்சி
விவேகம் அவகட்சி!
ராணியாக பத்து
ஆண்டு காலம்-அவள்
கெத்து காட்டிய கோலம்
கொட்டி தீர்த்த கோவம்!
மருது சகோதரர்கள்
மந்திரி ஆனார்கள்
மக்களுக்கு முந்திரியாய்
முன்மாதிரியாய்...
மகள் வெள்ளச்சி
இளவரசி!
ஆனதும் திருமணம்
வாழ்வியல் கடன் முடித்து
உயிரியல் உட(ல்)ன்
தொலைத்து...
நாச்சியார் மறைந்தார்
இல்லை இல்லை
வீரத் தமிழச்சியாய்
மக்களின் மனதில்
நிறைந்தார்!
ஊர் சொல்லும் வீரத்திற்கு
உதாரணமாய்
உவமையாய்
உன் பெயர் சொல்லும்
வேலு நாச்சியார் யென
மேலும் போற்றிச் சொல்லும்!
படிக்கும் போது
வேர்த்தது
படைக்கும் போது
இதை சேர்த்தது...
பகிரும் போது
ரோமம் சிலிர்த்தது
அவள் நாமம் ஒலித்தது
மனசெல்லாம்...
வீர மங்கை!
அவள் புகழ்
மங்காது ஒலிக்கட்டும்
முழுங்கு சங்கே!
Comments
Post a Comment