மனதை தொட்ட...!

மழைத் துளி
மண்னணத் தொடும்...
மனித நேயம்
விண்ணைத் தொடும்!
நமக்கு-
எத்தனையோ அநீதிகள்
ஆணவங்கள்
அகங்காரம் அராஜகம்
அருவருப்பான
அநாகரிகங்கள்
அரங்கேறிய போதும்...
நம்-
கண்ணீல் பட்டும்
காதில் கேட்டும்
மௌனமாய் மென்று
தின்றோம்...
மனதில் தின்று
கொன்றோம்!

அவ்வப்போது-நம்
அறியாமையை தட்டி
எழுப்பும் சம்பவங்கள்...
அறிந்ததும் தட்டி
எழுப்பும் சந்தோஷங்கள்!
அந்த தருணங்கள்
இன்னும் தரணியிலே
தேசம் தாண்டி
நேசம் காட்டிய
நேசங்கள் பறைசாற்றா
பாசங்கள்...
அவை-
திமிர் இல்லா
பக்குவங்கள்
கோழைத் தனமில்லா
தோழமை யோட(டு)
பங்களிப்பு கள்...
நினைக்கவே நெஞ்சம்
நெகிழ்கிறது
நெஞ்சு க்குழி நெருடுகிறது
இனிதாய் வருடுகிறது
இதயம் தொடுகிறது...
இன்னும்-அந்த
மழைக்கான காரணம்
மழைத்துளி மண்ணை
தொடவும்
மனித நேயம்-
விண்ணைத் தொடவும்
தொடரட்டும் இதுப் போல்...
உலக கால்பந்தாட்ட
போட்டியில்-ஜப்பான்
நேர்மையாய் தோற்றாலும்...
தன் மேன்மை யால்
வென்றார் கள்!
தாங்கள் தங்கியிருந்த இடம்
பார்வையாளர்களை
தாங்கிய இடம்
அத்தனை யும்
சுத்தம் செய்த போக்கு
தங்கள்-
தோல்வி க்கு ஏதும்
சொல்லாத சாக்கு!
அழுகையுடன்
தொழுகை யாய் செய்த
நேர்த்தி...
வாழ்த்துகளும்
வணக்கங்களும்!!
அவர்களது பிறப்பிற்கு
பிந்திய-
உன்னத வளர்ப்பிற்கு!

மற்றொன்று!
தாய்லாந்து குகை யில்
தண்ணீருடன்
வெளிவரா வகையில்
கண்ணீருடன்...
மாட்டிக்கொண்ட அச்
சிறுவர் களை
பார்க்க வந்தனர் பலர்
அவர்களை
காக்க வந்தனர் சிலர்
உயிரின் மதிப்பை
உயர்வாய் கருதி!
காத்தும் தந்தனர்...
அதிலும்-
வாயுவை கொடுத்த
இல்லை இல்லை
தன் வாழ்வை கொடுத்து-காத்த
அந்த உத்தமரை!
பதிமூன்று சிறுவர்களை
பத்திரமாய் சேர்த்தவரை...
ஒருவர் கூட
 பலியில்லை-அவரைத்
தவிர!

நெஞ்சை நெகிழ வைத்து
நினைத்து அழ வைத்து
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எங்கையோ இறந்த
இறந்தும்!
நித்தம் வாழும்-அந்த
நித்திய சீலனை
போற்றுவோம்!
எந்த தேசத்தவராய்
இருந்தால் என்ன
மனிதர்களை
நேசித்தவர் அல்லவா!
இதுப் போல் புனிதர்கள்
இன்னும்-
புகழிடமாய் இம்மண்ணில்...
மழைத்துளி
மண்ணைத் தொட
காரணமாய் என்றும்!
அன்புடன் தொடரட்டும்...


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1