ஆண்டவரே! காமராசரே!!

உங்களை
ஆண்டவனாய் பார்க்கிறேன்...
எங்களை ஆண்டவரே!
இறையாய் பார்க்கிறேன்...
நிறை கண்டவரே!
கடவுளாய் காண்கிறேன்
கடமை உள்
கொண்டவரே...
எங்கள்
காமராசரே!

ஆண்டவன் -அற்புதம்
நீங்கள் அரசியலில்
எதிர்பதம்...
 கடவுளுக்கு
எத்தனையோ பெயர்கள்
உனக்கும் அது போல...
இறை-
உருவமில்லாது
பல யிடத்தில்...
நீங்கள்!
நிறை
உருவத்தோடு
 தமிழகத்தில்!
கடவுளை கண்டவர்கள்
இல்லை
உன்னை
கண்டவர்களுக் கெல்லாம்-
நீ
கடவுள்.
இறை-மறைந்து
இருந்தும் இருக்கிறார்
நீ!
இறந்தும்
நிறைந்து இருக்கிறாய்!
கடவுள் மறுப்பதற்க்கு கூட-
ஆள் உண்டு!
இங்கு
உன்னை மறப்பதற்கு
மறுப்பதற்க்கு
ஏது வுண்டு!

கடவுள் இருந்தும்
கண்ணுக்கு இல்லாதவர்
நீயும்-இருக்கும் போது
உனக்கென்று ஏதும்
இல்லாதவர்!
அரசாள உருவாக்கியதில்
நீ!
ஆண்டவனுக்கு நிகர்...

உன் கருணை
அருள் எளிமை
ஆட்சி ஆளுமை
நிதானம் நிதர்சனம்
அத்தனையும்-அந்த
ஆண்டவனுக்கும்
பொருந்தும்!
உன் மரணம்
மறுப்பதற்கில்லை
ஆனால்-
உன் மறைவு
மறப்பதற்கில்லை!

நினைக்க(வே)
இத்தருணத்தில்
நீ இருந்தால்...
நான் அதிகம்
பேசவில்லை...
உன்னை அழைத்துக்
கொண்டவனே கேள்-தன்
அருகில் அமர்த்திக்
கொண்டவரே கேள்
அந்த ஆண்டவனை கேள்
இன்றைய தமிழகத்தின்
நிலை...
என்ன வென்று!

நெஞ்சுத் தீயில்
உருகும் நெய்யாய்
மெய்யாய்...
உனை
நினைக்கவே
தோன்றுகிறது
நித்தம்!
ஆட்சி ஆள வருவோர்
எவராவது
உன் போல் - இனி
வருவாரா யென...
அய்யா!
காமராசரே - எங்கள்
இதயத்து நேசரே!
உனை தெரிந்து
அறிந்து-இங்கு
உனை நினைக்காத
ஆள் இல்லை
இந்த நாளிலே...


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1