நெல்சன் மண்டேலா!



கருப்பு இன காந்தி
கருப்பர்களின் சாந்தி!
கொள்கை ஏந்தி
அவரின விடுதலை வேண்டி...
பல வருடம் சிறையில் வாடி
அக்கறை யில் ஒடி
அறை இருட்டில் பாடி
பெற்று தந்தார் கோடி-
இன்பம் கூடிய
சுதந்திரம்!

அமைதி அகிம்சை
அவரது சுக மந்திரம்!
தென்ஆப்பிரிக்க தலைவர்...
பின் ஆர்பரிக்க
வளந்த வர்
பிறரை அரவணைத்து
உயர்ந்த வர்!
நெல்சன்!
பெற்றோருக்கு
 நல்ல(சன்) மகன்
மண்டேலா!
தலைமை ஏற்றுக்
 கொண்ட தாலே
மறைந்த துயரம்
மலர்ந்த சுதந்திரம்
பெற்றதாலே...
வெற்றி மகனாய்
தென் ஆப்பிரிக்க
தலைமகனாய்
தன்நிக ரில்லா
தலைவனாய்
தலைவன் ஆனாய்!
நாடு போற்றும் நாயகனாய்
ஏகனாய்!
 ஏற்றம் பெற்ற
அந்த இனத் தலைவனுக்கு
உவமை யேது
எடுத்துச் சொல்ல-இன்று
அகவை நூறு!
ஆயிரம் பௌர்ணமி
கண்டவர்
ஆயினும் பௌத்திரம்
கொண்டவர்
ரௌத்திரம் கொன்றவர்
சகோ தத்துவம்
சொன்னவர்
சரித்திரம் வென்றவர்!

அவரை நினைந்துக்
கொள்ள...
நிரந்தரமற்ற உயர் சொல்லும்
நிரந்தரமாய் அந்த உறவைக் கொள்ளும்...
அன்பால் நட்பால்
அவர் நடப்பால்
உயர்வாய் உறவாய்
அவரை உயர்ந்த வராய்
தலைவனாய் தகப்பானாய்
ஊர் போற்றும்
பெருமை ஏற்றும்
இன்னும் மறையாத
மறவாத அத்தலைவனுக்கு
மலர் வளையம்
மனதில் வைத்து
வேண்டுகிறோம்
என்றும் மறையா
அவரது புகழ்
என்றென்றும் ஓங்குக!
அமரத்தலைவர்
நிரந்தமானவர் -எந்
நிலையிலும்-என்(நம்)
நினைவில் நீங்காதவர்!
அவரது நினைவை
பிறப்பை போற்றுவோம்...
பெருமை கொள்ளுவோம்!
அவரது நூற்றாண்டில்
இன்று...
வாழ்க வளர்க!!



Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1