காலம் சொல்லும் கலாம்!

அய்யா!
உன்னை நித்தம்
நினையா விட்டாலும்...
உன்னத மானவர்களை
நினைக்கும் போது-உன்
முகம் நினைவுக்கு வரும்!
உயர்வானவர்களை
என்னும் போது-உன்னை
நினைக்க வரும்!
யாரேனும்-
இந்தியா வல்லரசு ஆகு
மென பேசும் போதெல்லாம்-உன்
முகம் கட்டாயம்
காட்சியாக மாறும்!

தூய்மையான வர்களை
நினைக்கும் போதும்
உன் முகம்
எ(ம்)ன் எதிரில்...
எளிமையாக
 வாழ்ந்தவர்களை
எண்ணும் போது-நின்
முகம் நிதர்சனமாய்...
தெரியும்!
என் கனவு
மெய்ப்படும் போதெல்லாம்
கவர்சியான உன் முகம்
சிரிப்பில் வெளிப்படும்!
ஊக்கமும் ஆக்கமும்
பெற்றவர்களை கானும்
போதெல்லாம்...
சிறப்பாய் உன் முகம்!

பேசா(து)த வெற்றியிலும்
உன் வெற்றிப் பேச்சிலும்
மனம் நிறைந்திருக்கும்
அதில்- உன் முகம்
மறைந்திருக்கும்!

அக்டோபர் 15ந்தும்
ஜுலை இருபத்தேழும்
உன் நினைவு
நிறைய இருக்கும்
இதயம் நெருங்கி
நிறைந்திருக்கும்!

அறிவுக் கோவிலின்
அனையா விளக்கே
அன்பின் வடிவமே!
அறிவுச் சுடரே
மறையா உருவே
மாறாத் திருவே...
எங்கள் கலாம்
அய்யாவிற்கு-
தானாய் சலாம்
செய்யும் கரங்கள்!
அது-
நன்றி கரங்கள்...

அன்புடன்

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1