மன்னிக்க வேண்டுகிறேன்!
என்னையே எண்ணி-
 எண்ணி உன்னை
எண்ணாது போனேன்!
குத்து விளக்கின் ஒளி
வெண்குழல் வெளிச்சத்தில்
 தெரியாது போனது!
என்னிடம் குறை யிராது
என்றென்னி -  உனை
நிறை செய்யாது போனேன்!

ஆற்று வெள்ளத்தில்-அடி மண் அறியாதது
போல்-
உன் ஆழ் மனம்
அறியாப் போனேன்!
விலகாது இருப்பதாகவே எண்ணி இத்தனை விலகி இருக்கிறேன்!

உன் வெகு நேர காத்திருப்பின்...
விலை அறியா போனேன்!
நின் மதியின் வெகுமதி
உயர்(கூர்) தெரியாது
போனேன்!
விரல் தொடும் தூரத்தில் இருந்தும்
உன் விரக்தி யை
சந்திக்க வில்லை!
சிரமம் கூடாது என
எண்ணி-சினப்
படுத்திருக்கிறேன்...
சுதந்திர பறவை(யாய்)
என நினைத்து
இத்தனை நாட்கள்
என் சிறைக்குள்!
முத்தாய்பாய்
புருஷர்களுக்கு முன்
மாதரி யென நினைத்து
நானும் புறமுதுகிட்டு
ஓடித் தான் இருக்கிறேன்!
இருந்திருக்கிறேன்...


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1