மெல்ல... யோசனை!
வட்டில் சோறும்
வறுத்த கருவாடும்
நல்ல வாசனை தான்!
இருந்தும்
மெல்ல-யோசனை தான்...
மழை நீர் பயிர் அழிக்க
திட்டம் வகுத்தது என்ன
இதை தடுக்க!
பரிசுத்த ஆவியை பார்க்கப் போன
பாதிப் பேர் மூஞ்சி யிலே
முகத்த கானோம்!
சேராத கூட்டுக்கு
சேர்த்து வைச்ச ஓட்டு
எதற்கு!
சேத்தோட நாத்து நட
சேர்ந்து வாழ
பார்த்து நட...
பழகி பார் கொஞ்சம்
விழகிப் பார்-அஞ்சும்!
பாதை மாறி பழகுது
பார்த்து பார்த்து அழுகுது
போனத்தான் வருமா
இது- புறம்போக்கு நிலமா!
நாளும் கெடுக்கவில்லை
நல்லதும் நடக்கவில்லை
நாட்டாமை பண்ண தெரிஞ்சவருக்கு
நாடாள தெரியல...!
அடைக்கு வைத்த முட்டை
அத்தனை யும் கூமுட்டையா போனதென்ன...
அரசியலுக்கு வந்வரெல்லாம்-அதை
ரகம் ஆனதென்ன!
மாநிலத்தின் மாட்சி
மறந்து ஆளும் ஆட்சி!
மத்தியிலே ஆட்சி
நம்மை மதிக்காம போச்சு!
சேர்த்து வச்ச வளமெல்லாம்
சேம நல நிதி போல
போன யிடந் தெரியலை
இனி புலபடுமா - அது
புரியலை!
மனுச முயற்சி-மனசு
வச்சா தெரியும் பாரு...
ஒத்தையாய் இருக்கையில
மத்ததை நினைக்கல
மொத்தமா மோசமுனு
மனசு யது வெறுக்கல!
யோசனை சுருங்குது
வாசனை இழுக்குது...
வட்டிச் சோறும்
வறுகருவாடும்
வாசனையாத்தான்
இருக்கு
மெல்ல...
வரும்-
நாளை நினைத்து
கொஞ்சம் யோசனை யாவும்
இருக்கு!
வறுத்த கருவாடும்
நல்ல வாசனை தான்!
இருந்தும்
மெல்ல-யோசனை தான்...
மழை நீர் பயிர் அழிக்க
திட்டம் வகுத்தது என்ன
இதை தடுக்க!
பரிசுத்த ஆவியை பார்க்கப் போன
பாதிப் பேர் மூஞ்சி யிலே
முகத்த கானோம்!
சேராத கூட்டுக்கு
சேர்த்து வைச்ச ஓட்டு
எதற்கு!
சேத்தோட நாத்து நட
சேர்ந்து வாழ
பார்த்து நட...
பழகி பார் கொஞ்சம்
விழகிப் பார்-அஞ்சும்!
பாதை மாறி பழகுது
பார்த்து பார்த்து அழுகுது
போனத்தான் வருமா
இது- புறம்போக்கு நிலமா!
நாளும் கெடுக்கவில்லை
நல்லதும் நடக்கவில்லை
நாட்டாமை பண்ண தெரிஞ்சவருக்கு
நாடாள தெரியல...!
அடைக்கு வைத்த முட்டை
அத்தனை யும் கூமுட்டையா போனதென்ன...
அரசியலுக்கு வந்வரெல்லாம்-அதை
ரகம் ஆனதென்ன!
மாநிலத்தின் மாட்சி
மறந்து ஆளும் ஆட்சி!
மத்தியிலே ஆட்சி
நம்மை மதிக்காம போச்சு!
சேர்த்து வச்ச வளமெல்லாம்
சேம நல நிதி போல
போன யிடந் தெரியலை
இனி புலபடுமா - அது
புரியலை!
மனுச முயற்சி-மனசு
வச்சா தெரியும் பாரு...
ஒத்தையாய் இருக்கையில
மத்ததை நினைக்கல
மொத்தமா மோசமுனு
மனசு யது வெறுக்கல!
யோசனை சுருங்குது
வாசனை இழுக்குது...
வட்டிச் சோறும்
வறுகருவாடும்
வாசனையாத்தான்
இருக்கு
மெல்ல...
வரும்-
நாளை நினைத்து
கொஞ்சம் யோசனை யாவும்
இருக்கு!
Comments
Post a Comment