விதையும்... நானே!

நம்
வெகுதூரப் பயணத்தில்
என் குட்டி தூக்கம்
இதமானது...
இயல்பானது!
உன் வேகத்திற்கு எட்டி
வாராத போதும்...
இடை நிற்றல் இல்லை!
இலக்கு என்று நீ -  வைத்து
தொட்ட எல்லையை
எட்ட(தூரம்) நின்று
தொடப் பார்த்தேன்...
தொடாது நின்று-வந்த
வழி பார்த்தேன்!
வெற்றி என்னமோ
உன்னோடு தான்
எது-வெற்றி
என்பதுதான் என்னோடு...
நான்- தயங்கி
இருந்த காலத்தில்
நீ தாங்கி இருக்கலாம்...
ஆனால்-
என் தயக்கம் எனது
தாயகம் அல்ல!
களிப்பில் நீ இருந்தாலும்
வியப்பில் நான்!
இன்னுமா நான்...
எனக்குள்!

உன் உயர்வு க்கு(ம்)
வேர் வைத்தேன்
தினம் நீர் வைத்தேன்!
யதார்த்தம் மடிந்து
வியாக்கியானம் விடியலை தொட்டது!
ஆம்!
உனக்குள்
வெற்றி சேர்த்த
விலையில்லா
விதையும்...
விதைத்தவனும்
நானே!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1