அன்பு மகளே!
தேனும் பாலும்
தெகட்டாத கற்கண்டும்
நறு நெய்யும் -சிறு
தினையும் சேர்த்து
செய்த பொங்கல்!
அவள் என்றும்
என் திங்கள்!
அவள்-
நூற்றுக்கு நூறு-என்
எண்ணங்களின் தேரு!
என் வேள்வித் தீயின்
கேள்வித் தாய்!
கேள்- வித்தாய்...
சின்ன மகளே-என்
சின்னம் அவளே!
செல்ல மகளே-என்
செல்வ மவளே!
முத்து மகளே-என்
முத்தம் மொத்த(மு)ம்
அவளே!
தங்க மகளே-என்னுள்
தங்கிய வளை!
பவள(ம்) மகளே-என்னில்
பலவிதம் அவளே!
சின்னத் தாய் அவள்-என்
உயிரில் சின்னதாய் அவள்!
தாயுமானவள்-என்
உற்றதாயும் ஆனவள்...
எனது ஐந்தெழுத்து மந்திரத்தின்
ஆறெழுத்து ஆனவள்!
மறைமதி நிறைமதி-எனது
நெடுநாளைய வெகுமதி! - அவள்
நித்தம் பூக்கும் சித்தம் போக்கும் -என்
பரிசுத்த மவளே!
அவள்-
நீராய் - என் வேராய்
நிலமாய்-எனது பலமாய்
தீயாய்-என் சக்தியாய்
வெளியாய் என் ஒளியாய்
காற்றாய்-என் கூற்றாய்
நதியாய்-என் மதியாய்
கடலாய்-பாதி உடலாய்
என் பார்வைத் திடலாய்
பக்கத் தீவாய்...
அன்னமாய் மன வண்ணமாய்
என் சிரத்தின் உச்சியில்
கரம் சேர்த்து
கலசமாய் வீட்டிருக்கும்
என் மனசாட்சியின்
பிம்பத்தை வெளிகாட்ட
புகைப்பட மில்லை
புதுப் படையலாய்-இது
எனது துணையின் திகழ்
என் இளமையின் புகழ்
என் மரணத்தின் நிழல்
என்றும்..
எனது அன்பு மகளே
என் அன்பும் அவளே!
தெகட்டாத கற்கண்டும்
நறு நெய்யும் -சிறு
தினையும் சேர்த்து
செய்த பொங்கல்!
அவள் என்றும்
என் திங்கள்!
அவள்-
நூற்றுக்கு நூறு-என்
எண்ணங்களின் தேரு!
என் வேள்வித் தீயின்
கேள்வித் தாய்!
கேள்- வித்தாய்...
சின்ன மகளே-என்
சின்னம் அவளே!
செல்ல மகளே-என்
செல்வ மவளே!
முத்து மகளே-என்
முத்தம் மொத்த(மு)ம்
அவளே!
தங்க மகளே-என்னுள்
தங்கிய வளை!
பவள(ம்) மகளே-என்னில்
பலவிதம் அவளே!
சின்னத் தாய் அவள்-என்
உயிரில் சின்னதாய் அவள்!
தாயுமானவள்-என்
உற்றதாயும் ஆனவள்...
எனது ஐந்தெழுத்து மந்திரத்தின்
ஆறெழுத்து ஆனவள்!
மறைமதி நிறைமதி-எனது
நெடுநாளைய வெகுமதி! - அவள்
நித்தம் பூக்கும் சித்தம் போக்கும் -என்
பரிசுத்த மவளே!
அவள்-
நீராய் - என் வேராய்
நிலமாய்-எனது பலமாய்
தீயாய்-என் சக்தியாய்
வெளியாய் என் ஒளியாய்
காற்றாய்-என் கூற்றாய்
நதியாய்-என் மதியாய்
கடலாய்-பாதி உடலாய்
என் பார்வைத் திடலாய்
பக்கத் தீவாய்...
அன்னமாய் மன வண்ணமாய்
என் சிரத்தின் உச்சியில்
கரம் சேர்த்து
கலசமாய் வீட்டிருக்கும்
என் மனசாட்சியின்
பிம்பத்தை வெளிகாட்ட
புகைப்பட மில்லை
புதுப் படையலாய்-இது
எனது துணையின் திகழ்
என் இளமையின் புகழ்
என் மரணத்தின் நிழல்
என்றும்..
எனது அன்பு மகளே
என் அன்பும் அவளே!
Comments
Post a Comment