மகளுக்காக...
என் முதல் முத்தத்தில்
பிறந்தவள் நீ!
நான் மறுமுத்தம் பெற...
என் உயிர் சுத்தம்
செய்தவள் நீ!
நான் சத்தமாய் சொல்ல...
என் விருத்தமாய்
போனாய் நீ!
நான் வருத்தம் மறக்க...
என் சுகந்தமாய்
ஆனாய் நீ!
நான் சுகம் தன்னில் திளைக்க...
என் சுடர் ஒளியாய்
சுற்றினாய் நீ!
நான் ஜோதியாய் ஒளிர்க்க...
என் தேடலில் கிடைத்த
தேவதை நீ!
நான் வாடாது சிறக்க...
என் எண்ணங்களின்
வண்ணமாய் நீ!
நான் உண்மையை(யாய்) உரைக்க(இருக்க)...
என் சௌகரிய(க)
சௌந்தரியம் நீ!
நான் சங்கடங்கள் மறக்க...
என் உயிரின்
ஒலியாய் நீ!
நான் என்றும் ஒலிக்க...
என் அரும் பசியின்
உணவாய் நீ!
நான் இறவாது இருக்க...
என் நெஞ்சுக்குள்
என்றும் நீ!
நான் என்றென்றும் சுவாசிக்க...
என் செல்ல
மக(ளே)ளாய் நீ!
நான் தினந்தோறும் பிறக்க...
பிறந்தவள் நீ!
நான் மறுமுத்தம் பெற...
என் உயிர் சுத்தம்
செய்தவள் நீ!
நான் சத்தமாய் சொல்ல...
என் விருத்தமாய்
போனாய் நீ!
நான் வருத்தம் மறக்க...
என் சுகந்தமாய்
ஆனாய் நீ!
நான் சுகம் தன்னில் திளைக்க...
என் சுடர் ஒளியாய்
சுற்றினாய் நீ!
நான் ஜோதியாய் ஒளிர்க்க...
என் தேடலில் கிடைத்த
தேவதை நீ!
நான் வாடாது சிறக்க...
என் எண்ணங்களின்
வண்ணமாய் நீ!
நான் உண்மையை(யாய்) உரைக்க(இருக்க)...
என் சௌகரிய(க)
சௌந்தரியம் நீ!
நான் சங்கடங்கள் மறக்க...
என் உயிரின்
ஒலியாய் நீ!
நான் என்றும் ஒலிக்க...
என் அரும் பசியின்
உணவாய் நீ!
நான் இறவாது இருக்க...
என் நெஞ்சுக்குள்
என்றும் நீ!
நான் என்றென்றும் சுவாசிக்க...
என் செல்ல
மக(ளே)ளாய் நீ!
நான் தினந்தோறும் பிறக்க...
Comments
Post a Comment