ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
ஆச்சரிய குணம்
ஆசிரியர் இனம்!
ஆசான் நிலை
அறிந்து பெற்றாரோ
அதிர்ஷ்ட்டத்தில் பெற்றாரோ...
கற்ப்பவர்களுக்கு
உற்ற துணை
கடவுளர்களுக்கு இணை!
கற்போர்கள் அதை நினை...
எத்தனை துயர் தனக்குள்ளே இருந்தாலும்-இடர் பல
தெரிந்தாலும்
தள்ளாது நிற்பர்
தன் நலன் மறப்பர்!
வலி பல இருந்தும்
வழி சில காட்டியவர்
கடமையில் கண்ணாய்
கரும்பலகை முன்னால்
விரல் ஆட
மொழி பேசும்
கிளி அன்றோ-அவர்
பொருட்டு கேலி உண்டோ!
எத்தனை ஆண்டுகள்
தடை யில்லாது
மடை கொள்ளாது
படை வெல்லாது
பகை சொல்லாது
பாடம் சொல்லும் பாத்திரம்
பொறுமையில் அவர்
சமுத்திரம்!
எத்தகைய உயர்விலும்
உயர்வின் மத்தியில்
சிறு துளியாய் சிந்திக்கும் - அவர்
நினைவு...
எவருக்கும் உண்டு!
அவர்தம் பெருமைக்கேற்ப
வாழ்ந்தவரும் தாழ்ந்தவரும்-
வழி தவறி போனவருக்கும்
பொதுவாய் தான்
கற்பித்தார்
அதுவாகத்தான்
சிறப்பித்தார்!
சிதறிய கல்லாய்
அற்பமாய் போகாது
செதுக்கிய கல்லாய்
சிற்பமாய்...
சிகரம் தொடாது போனாலும் - நாம்
சிரமம் தொடாது
போனதற்கு...
மேலோங்கிய மேலோர்
அவர்-
மேன்மை போற்றுவோம்!
மேகங்கள் கூட்டமாக
போனாலும்
மழைத்துளி தனியேத்தான் பிறக்கும்
தன் நிகரில்லா சிறக்கும்!
அதுபோல் ஆசிரியர்
பணி சிறக்க
வாழ்த்துவோம்!
கருவறையில் கண்மூடி
வகுப்பறையில்
விழித்துக்கொண்டோம்
அவர் தம்
அக்கறை கண்டோம்!
தானாக வாழாது
தனதாக-நமதாக வாழ்ந்தவர்!
கருவிழி கொண்ட எமக்கு
கருத்தொளி
கொடுத்த உமக்கு
எமது வாழ்த்துக்கள்!
வணக்கங்கள் பல!!
இதை-
இத்தினத்தில் மட்டுமல்ல
எத்தினத்திலும்
நினைவு கூர்வோம்!
ஆச்சரிய குணம்-அது
ஆசிரியர்கள் இனம்!
ஆசிரியர் இனம்!
ஆசான் நிலை
அறிந்து பெற்றாரோ
அதிர்ஷ்ட்டத்தில் பெற்றாரோ...
கற்ப்பவர்களுக்கு
உற்ற துணை
கடவுளர்களுக்கு இணை!
கற்போர்கள் அதை நினை...
எத்தனை துயர் தனக்குள்ளே இருந்தாலும்-இடர் பல
தெரிந்தாலும்
தள்ளாது நிற்பர்
தன் நலன் மறப்பர்!
வலி பல இருந்தும்
வழி சில காட்டியவர்
கடமையில் கண்ணாய்
கரும்பலகை முன்னால்
விரல் ஆட
மொழி பேசும்
கிளி அன்றோ-அவர்
பொருட்டு கேலி உண்டோ!
எத்தனை ஆண்டுகள்
தடை யில்லாது
மடை கொள்ளாது
படை வெல்லாது
பகை சொல்லாது
பாடம் சொல்லும் பாத்திரம்
பொறுமையில் அவர்
சமுத்திரம்!
எத்தகைய உயர்விலும்
உயர்வின் மத்தியில்
சிறு துளியாய் சிந்திக்கும் - அவர்
நினைவு...
எவருக்கும் உண்டு!
அவர்தம் பெருமைக்கேற்ப
வாழ்ந்தவரும் தாழ்ந்தவரும்-
வழி தவறி போனவருக்கும்
பொதுவாய் தான்
கற்பித்தார்
அதுவாகத்தான்
சிறப்பித்தார்!
சிதறிய கல்லாய்
அற்பமாய் போகாது
செதுக்கிய கல்லாய்
சிற்பமாய்...
சிகரம் தொடாது போனாலும் - நாம்
சிரமம் தொடாது
போனதற்கு...
மேலோங்கிய மேலோர்
அவர்-
மேன்மை போற்றுவோம்!
மேகங்கள் கூட்டமாக
போனாலும்
மழைத்துளி தனியேத்தான் பிறக்கும்
தன் நிகரில்லா சிறக்கும்!
அதுபோல் ஆசிரியர்
பணி சிறக்க
வாழ்த்துவோம்!
கருவறையில் கண்மூடி
வகுப்பறையில்
விழித்துக்கொண்டோம்
அவர் தம்
அக்கறை கண்டோம்!
தானாக வாழாது
தனதாக-நமதாக வாழ்ந்தவர்!
கருவிழி கொண்ட எமக்கு
கருத்தொளி
கொடுத்த உமக்கு
எமது வாழ்த்துக்கள்!
வணக்கங்கள் பல!!
இதை-
இத்தினத்தில் மட்டுமல்ல
எத்தினத்திலும்
நினைவு கூர்வோம்!
ஆச்சரிய குணம்-அது
ஆசிரியர்கள் இனம்!
Comments
Post a Comment