மந்தியுடன் சில நிமிடங்கள்...!
அன்றொரு நாள் வேளை பளுவின் மத்தியில்... வேர்வை துளிகள் நெத்தி யில்! சற்றே ஓய்வுக்காக சாய்ந்த நேரம் அந்தி நேரம்! அங்கே- மந்திகள் சில வந்த மாயம்... மரத்திலிருந்து மதிலுக்கும் மதிலில் யிருந்து ஆஸ்பத்திரியின் சன்னலுக்கும் தாவித் திரிந்தன... சின்ன சந்தோஷம் தூவி சென்றன! முகம் அகன்று ஒடுங்கி சுருங்கி கண்கள் இரண்டும் பளிச்சென்று... சிலிர்ப்பூட்டும் சிரிப்பு! குத்த வைத்து-அமர்ந்து கைகோர்த்து உணவை வாய்க்குள் செலுத்திய அழகு! பார்க்க ஆணந்தமாய் இருந்தது - சிறிது அச்சமாகவும் இருந்தது! நடக்கையில் பின்புறம் சிறிது பலதுக்கு சிவந்து காணப்பட்டது! அங்கு மட்டும் ஏன் சிவப்பு ஆராய மன மில்லை! உடற் ரோமத்துடன் உருவ ஒற்றுமை யுடன் பருமனாக ஒடுக்கமாக சிறிதாய் பெரிதாய் வயிற்றில் குட்டியுடன் பலவாறு... பயமின்றி திரிந்தன நம்மை-பார்ப்பவர்களை பயமுறுத்தி அலைந்தன! கையில் வைத்திருப்பதை எட்டி தாவி தட்டி பறித்தன பார்க்க பரவசமாக இருந்தாலும்... உள்ளுக்குள் சிறு பயம்! குரங்கு(கள்) குட்டியை பிடிப்பதில்லை... குட்டிகள் தான் தாயே பற்றிக் கொள்கிறது! தாவும் போதும் ஓடும் போதும்...