சின்னஞ்சிறு வயதில்...!



சிரிக்க மட்டும் தெரிந்த வயது
சிரித்து கொண்டே
இருப்போம்...
சந்தோஷம்-அது
தனி என்று இல்லை
அதன் சார்ந்தே!
படித்தது மறக்க வில்லை
படிப்புதான் எதுவென்று
தெரியவில்லை...
படிக்க சிறிது சிரமம்!

அழுகை எப்போதுமில்லை
வலிக்கும் போது மட்டும்
வலித்தால் அழுகை...
வரும்!

காலை கல்வி கூடம்
மாலை விளையாட கூடும்
கூட்டமாய்...
செலவுசெய்ய தோன்றுவதில்லை
சில்லறை இல்லாத போது...
கடன் வாங்கி!
சாம்பாத்தியமும்
தெரியவில்லை
ஆனால் சேமிக்க ஆசை...
உண்டியல் தினம்
என்னை நோக்கும்!

உடைந்த பென்சிலும்
தைத்த செருப்பும்
தையல் பிரிந்த(கால்)
சட்டையும்
கைப்பையும்
அலுமினிய பாக்சும்
அசிங்கமாக தெரியவில்லை
எதையும் சட்டை
செய்வதில்லை!
வருத்தக் கோடு
வறுமை கோடு-இருந்தும்
அர்த்தம் புரிவதில்லை
அதை ஆராய்ந்தும்
பார்பதில்லை!

பழைய புத்தகம்
பாதிவிலை...
படித்துமுடித்து(கிழியாமல்)
அதையும் பாதிக்கு விற்றோம்!
தீபாவளி க்கு சீருடை
என்றாலும்
சிரித்தே உடுத்தி னோம்
(அடி வாங்குவது யாரு)
விலை குறைந்த
பட்டாசு கை நிறைய...
சந்தோஷம்!
பொங்கலுக்கு
அடிகரும்பு போட்டி போட்டு
மென்றோம்
மறுநாள் எடுத்து வைத்து
தின்றோம்!
கோழிக்கு உடம்பு
சரியில்லை என்றால்
எங்களுக்கு
குழம்பாகும்!

இட்லி க்கு மாவு அரைத்து
அடுப்பெரிக்க சுள்ளி
பொறுக்கி
திங்காது முட்டை விற்று
டூரிங் தியட்டர்
சினிமா பார்த்து...

ராஜாவாய் தலைப்பா(கை) கட்டி
தென்னைமார் குச்சியால்
கத்தி சண்டை!
தட்டிவிட்ட தேன்மிட்டாயிக்கு
ஓ வென!  கத்தி...
சண்டை!
யாரும் பார்க்காத போது
எடுத்துன்போம்!
பார்த்துவிட்டால்...
சாமிக்கு - பூமாதேவிக்கு
சப்தம் மிட்டோம்!

சினிமா பாட்டு
ரேடியோ வில் கேட்டோம்
பாட்டு புத்தகம்
பத்து காசு
பருத்திப்பால் ஐந்து காசு...
பாட்டி கொடுத்த மூனு காசு
பொய்யே சொல்லாது
பொழுதை கழித்தோம்!

வெட்டவெளி குளியல்
தோட்டத்துக் கீரை
ஓர் அறை படுக்கை
சிம்னி விளக்கு...
அப்பா சைக்கிளில்
இடுப்பை பிடித்து கொண்டு
ஓர் உல்லாச பயணம்!
வெஞ்சனம் மில்லாது
கொஞ்சலுடன்
கொடுத்த அம்மாவின்
கூட்டாஞ்சோறு!

வருடம் ஒருமுறை
வெளியூர் பயணமாக
குலதெய்வ வழிபாடு!
உற்றார் உறவினர்
உரையாடல்...
என்ன மார்க்-
எப்ப கேட்டாலும்
யார் கேட்டாலும்...
ஒரே பதில்
நூற்றுக்கு பத்து மார்க்
கம்மி!?
அதில் பாதிதான்-நான்!
படிப்பில் அக்கறை
இருந்ததோ என்னவோ
ஆனால்-
என் படிப்பு வைகையின்
அக்கரையில் தான்!
தாவணி போட்ட அக்காவிற்கு
சண்டியராய் பின்
செல்வோம்!
எண்ணெய் இல்லாத
தலை-என்னத் தலை!
பார்ப்பது அரிது
வெள்ளை பேப்பரை
தலையில் தேய்த்து
படம் வரைவோம்
சிறிது மண் போட்டு
அடியில் காந்தம் வைத்து-
இழுத்து
பேய் ஆட்டம்!
கிட்டி புல்லும்
பம்பர கட்டையும்
இல்லாத வீடு இல்லை!
பல்லாங்குழி யும்
பாண்டியும் ஆடாத
ஆள்(பெண்) இல்லை!
மழை பெய்யும் போது
எருமை யாய்
 நனைந்தோம்...
அருமையாய்
இருந்தோம்!

வாடகை வீடா
சொந்த வீடா-தெரியவில்லை
ஆனால்
சொர்க்கமாகத்தான்
இருந்தது!
பெரிதாக மைதானம்
ஏதுமில்லை இருந்தும்
தெருவெல்லாம் மைதானம்
வீதி யெல்லாம்
விளையாட்டு தான்!
ஆசிரியருக்கு அஞ்சினோம்
முப்பத்தைந்து க்கு
கெஞ்சினோம்!
அன்று கற்றது நிறைய
கற்பித்ததும் நிறைய...
என் கடந்த காலம்
மறைய,
மறக்க...
நிகழ்காலம்
நினைவில் இல்லை-அது
நிலைக்குவும் இல்லை!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1