சிறு வயது கல்வி!
அப்பாவின் ஆர்வ
கோளாறு...
ஆங்கில வழி கல்வி!
ஆங்கிலம் அந்நிய மொழி
அந்தரத்தில் அர்த்தமற்று
ஆனி வேர் அறியாமலே...
கிராமர்-கிராமத்து வாசம்
அதுவும் நமக்கில்லை
கிரக தூரம்!
தமிழ்!
தட்டு தடுமாறி
மனப்பாடம் மறந்து போகும்
கோனார் உரையே துணை!
இலக்கணம்-என்றும்
இரக்கமற்ற சந்திப்பு!
மேத்ஸ்-கனிதம்
அது மிக கணம்!
மேதை ஆக்கியது-
படித்தவர்களை!
என்னைப் போல்
பார்த்தவர்களை...
சயின்ஸ்-அறிவியல்
சங்கடபடுத்தியது
எம்மை பெரிதும்...
சங்கடபடுத்தினேன்
நானும்
சிவப்பு நிற அடி கோடிட்டு!
ஹிஸ்டரி-ஹிம்சை
படுத்தும்
வருடம் மாறி
நிகழ்வு மறந்து போகும்
வரலாறு தானே
வாராது போகாது
என நம்பிக் கெட்டேன்!
ஜியாகரப்பி-அது
ஜென்டில் ஒமிட்!
புவியியல் புலங்காது
சாய்சில் விட்டேன்...
பிறகு(வேறு)-என்னதான் படித்தாய்!?
அத்தனை யும்
அரைகுறை யாக...
அதனால் தான் என்னவோ
இப்படி (நானாக)
இருக்கிறேன்...
இப்படியே (தானாகவே)
இருக்கிறேன்!
இன்னல் ஒன்றுமில்லை
புது சன்னல் வழியாக
சிறு மின்னல் கண்டு!
இப்படி ஏதாவது எழுதிக்
கொண்டே...
Comments
Post a Comment