தீ ஆவளி! திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அன்பு தோழமைக்கும்
ஆசை உறவுகளுக்கும்!
இனிய-
தீ ஆவளித் திருநாள்
தீப ஒளித் திருநாள்
தீபாவளி நன்னாள்
வாழ்த்துக்கள்!


எண்ணெய் குளியலும்
எண்ணக் குளியலும்
நன்மை பயக்கட்டும்!
எண்ணம் போல்
வாழ்வு நல்லதாய்
அமைய...
இனிதாய் இன்பமாய்
இனிதாகட்டும்-நம்
நம்பிக்கை-இனி
அதுவாகட்டும்!
வாழ்க வளர்க!!
புறம் வளமாய்
அகம் நலமாய்
தேகம் சுகமாய்...
மங்களம் மாத்தாப்பாய்
ஒளிர
மகிழ்ச்சி வெடிச்
சத்தமாய் ஒலிக்க...

வாழ்க வளமுடன்
வளர்க வரம்பு மீறா
தனிமனித ஒழுக்கத்துடன்!
வாழ்க நலமுடன்
வளர்க  நட்புடன்!
வாழ்க சுகமுடன்
வளர்க சுற்றார்
உறவுகளுடன்!
இனம் காப்போம்
மற்றவர் மனம் நோகாது!
மதம் போற்றுவோம்
பிறர் மதம் தூற்றாது!
தமிழே! (தமிழரே) - நீ
வளர்க வாழ்க
எங்கும் எதிலும்
எப்போதும்...
தின மகிழ்ச்சி யாய்
மன முதிர்ச்சி யுடன்...
என்றும்
என்றென்றும் அன்புடன்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1