வருந்துகிறோம்!

வருந்துகிறோம்!

அன்பர்!
மோகனின் -  கிரேஸி
நாடகத்திற்கு பின்
கிரேஸி மோகனாய்
வளம்  வந்தாய்!

நகை சுவை
தென்றலாய்...
வீசும் போது
நீ!
புயலாய் உட்புகுந்து
 அதில்
உயரம் தொட்டாய்!
உன் -
நாடகமாக ட்டும்
சினிமா வாகட்டும்
தொடர் நகைக்கு
பஞ்சமில்லை...
உன் கை தொடர்ந்து
 எழுத
வஞ்சித்தது இல்லை!

மாது வும் மைதிலியும்
நீ!
படைத்தவை தான்
நாங்க பாடமாய்
படித்தவை தான்!
வயிறு வலிக்க
 சிரித்ததும்
பசி மறந்து
பார்த்ததும்
மன வலி போ க்க
மாத்திரை யாய்
 உன் நாடகங்கள்
ஒளி தகட்டில்...
நான்
நிலை மறந்த
நிலமை
பல சமையம் உண்டு!
உன்
வார்த்தைகளின்
வேகம் புரிய
மீண்டும் மீண்டும்
பார்த்தோம்!
ஒவோரு முறையும்
ஒன்று புதிதாய்
புரியும்!

சிரிக்க மட்டுமல்ல
நீ
சிந்திக்கவும்
வைத்து உள்ளாய்!
உன்
சிரிப்பு வைத்தியத்தில்
எங்கள் சோர்வை
(சாவை) ஒத்தி வைத்து..
நீ
முந்தி கொண்டாய்
சாகா வரம் என்று
இல்லாவிட்டாலும்
உன்
படைப்புகள்
 சாதாரண மானது
அல்ல...
இனி
மேல் உலகமும்
சிரிக்கட்டும்
சிறக்கட்டும்!
உன்
ஆவி ஆன்மா
சாந்தி கொள்ள
இறை வேண்டுகிறேன்!
உன்
பிரிவுக்கு
வருந்துகிறேன்!
உன் குடும்பத்திற்கு
ஆறுதல் கூற
யாரால் முடியும்!?
உன் இடம்
இனி
எங்கனம் நிரப்ப படும்
நீ இன்றி...


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1