என்ன தவறு செய்தோம்...!

என்ன தவறு செய்தோம்!

என்ன தவறு செய்தோம்...
எண்ணத் தவறுதலாக
எங்கு தவறு
செய்தோம்!

ஆலயங்கள் போல்
 இங்கு -
அநேக ஆஸ்பத்திரிகளில்
கூட்டம்!

நோய்கள் பெருகி
நோய் இன்மை குறைய
எது காரணம்!

ஐம்பது ஆண்டுகளுக்கு
 முன்பு கூட
இப்படி இல்லையே
இத்தனை நோய்
பயம் இல்லையே...
எல்லை இல்லா
துன்பம் -
எம் மக்கள் சந்திக்க
எது காரணம்!

கண்ணாடி அணியாத
சிறுவர்கள்
காண்பது அரிது!

சர்க்கரை நோய்
இரத்த அழுத்தம்
இல்லாத
வீடுகள் இல்லையே!
இளம் வயது மாரடைப்பு
இள வயது மரணம்
நெஞ்சை பிளக்கும்
செய்திகளாய்...

கல்யாண சுகங்கள் கூட
சுருங்கி விட்டது!
குழந்தை இன்மை
கூ டி வாழும் பழக்கமின்மை!

திருமண திருப்பங்களாய்...
பேரு கால
பிரசவங்கள் - கூட
சுகமாய் நடப்பதில்லை...
வலிகள் - சுயமாய்
அறிவதில்லை...
பிரசவ இழப்புகள்
இறப்புகள்  இன்னும்
 இருக்கத்தானே
செய்கிறது!
வளரும் நாடு
வளர்ந்த நாடு
பெருமிதம் வேறு!

தாயா சேயா - என
கேள்வி வரும்
போ தெல்லாம்
மனித நிலை என்ன?
மருத்துவத்தின்
மகத்துவம் எங் கே!

சமீப காலமாய்
கர்ப்பிணிகளுக்கு
சர்க்கரை நோய்
இரத்த அழுத்தம்
தை ரோய்டு என
நாம் அறியாத
 கார்ணங்கள்...
தெரிவதில்லை
அது - மிகுதியாய்
வெளியில் தெரியவில்லை!
கண்டுபிடித்து 
உதவுங்கள்
அரசே!
மருத்துவ மேதைகள்
 மகத்துவம் காண...

மாத்திரை மருந்துகள்
சிறு உணவாய்...
வருமானத்தில் பாதி -
மருத்துவத்திற்கா...

எம் மக்கள்
நோய் யற்று வாழ
வழி என்ன
கூறுங்கள்...
யாரை கண்டாலும்
கேட்டாலும்
விசாரிப்பு கள் கூட
நோய் பற்றிய...
எழ்மைய விட கொடியது
நோய் வருவது!
இனி சாவு
நோகாது வரட்டும்...

இன்றைய நிலை
மாற
மாறுங்கள்
மாற்றுங்கள்
பழக்க வழக்கஙகளை
வழக்கமான
பழக்கங்களை...
உணவு முறைகளை
உண்ணும் முறைகளை...
தீர்க்க ஆயுள் - கூட
வேண்டாம்
நோய் தீண்டா
ஆயுள் போதும்!
இறை வேண்டுகிறேன்
இது
நிறை வேற...

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1