இனி சொல்லாதே...

நண்பா -
நீ!
என் கல்லறைக்கு வா...
வாராது போ!
தயவு செய்து
காரணம் சொல்லாதே...

அன்பரே -
நீ!
எனக்கு கடன்
கொடு...
கொடுக்காது போ!
தயவு செய்து
புத்திமதி சொல்லாதே...

பெண்ணே -
நீ!
என்னை காதல்
செய்...
செய்யாது போ!
தயவு செய்து - உன்
கல்யாண சே தி
(தே தி) சொல்லாதே...

ஆ சானே -
நீ!
எனக்கு சொல்லித்
தா...
தாராது போ!
தயவு செய்து
உருப்பட மாட்டாய்
என சொல்லாதே...

அய்யா -
எனக்கு வேலை
கொடு...
கொடுக்காது போ!
தயவு செய்து
லாயக்கு அற்றவன்
என சொல்லாதே...

அம்மா -
நீ!
எனக்கு பால்
கொடு...
கொடுக்காது போ!
தயவு செய்து
சொல்லி இறக்கம்
கொள்ளாதே...

துணையே -
நீ!
எனக்கு இணக்க மாய்
இரு...
இல்லாது போ!
தயவு செய்து
பொய்யாய் இராதே...

மகனே -
நீ!
எனக்கு மரியாதை
கொடு...
கொடுக்காது போ!
தயவு செய்து
கொடுப்பது போல்
நடிக்காதே...

இறைவா -
நீ!
எனக்கு நிறைவை(வா)
தா...
தாறாது போ!
தயவு செய்து
இழி (இனி) பறவி
தாராதே...


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1