உணர்வுடன் யோசிப்போம்!

வனம் அழித்து
வளம் சேர்த்தோம்!
வளம் சேர்க்க
ஊர் வளர்த்தோம்
ஊர் பெருக
சாலை கேட்டோம்...
வாகனம் போக
வசதிகள் ஓங்க!
வசதிகள் பெருக பெருக...
வரப்பு அழிந்து
வயல்லும் அழிந்தது!
விவசாயம் இங்கு
வீரசாவில்...
களஞ்சியம் மெல்லம்
 கடுகாய்
சிறுத்தது!

வளமில்லாத
 வனமாய்
வயல் இல்லாத
நிலமாய்
வழி சாலை யானது -
அதுவே அரசின்
சாதனையானது!
அடுத்த வாரிசுகள்
என்ன செய்யும்!
வரகு அரிசி வேண்டாம் -
ஆனால்
வாய்க்கு அரிசி...
உழவு வேண்டாமா
 இல்லை - இனி
அரிசி உணவே
வேண்டாமா!
யாசிக்காதீர்கள்
உணவிற்கு!
யோசியுங்கள் உணர்வுடன்...
நண்பர் களே!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1