கறை போகாது...!

கை கொட்டி
காசு பறிக்கும்
ரெண்டு கெட்டான்
சிக்னல் லில்...
வேர்வை மீறி
வேதனை படும்
மனம் சம்மணம் மிட்டு
சங்கடப் படும்!
அவர் நிலை கண்டு..
அது -
பசியின் கொடுமை
இதை -
என்ன சொல்வது...
கை கொட்டாது
கையுட்டும் ஊழலும்
 புரிய
நீதி நேர்மை
இரண்டையும்
 கெடுத்தான்...
சிக்கிய பதவியில்!

வேட்டி கட்டிய
தமிழா!
ஆளும் பதவியில்...
நேற்று -
ஆணவ பேச்சு
பெருமை கொண்டோம்!
பரிசாய்
இன்று
பெரும் ஆமை
அதை கண்டோம்
இது
ப. சி.யின் கொடுமை!

உயர் பதவியில்
உச்சம் தொட்ட
தமிழர்களுக்கு
இது -
அவ மரியாதை
தமிழகத்தின்
தமிழ் இனத்தின்
தலை குனிய
காரைக்குடி
சிங்கமென நினைத்து
கரையானது
அசிங்கமா...

இது
செய்தியாகும்
ஊடகங்களுக்கு
சோறு போடும்!
விரக்தியாக நம்
மனம் சோர்வு படும்!

ஊழலும் கையூட்டும்
என்றுமே -
கறை சேராது
எனத் தெரிந்தும்...
அவரை போட்டால்
துவரையா
முளைக்கும்...
காத்து இருங்கள்
கார்த்திக் - சி(ஜி)
இனி
எத்தனை சி(c)
கரைத்தாலும்
காலத்தால் மறையாது
மாறாது - இக்
கறை போகாது...


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1