நட்பே...!

நட்பிற்கு இணை - ஏது!
நட்பிற்கு நிகர்
துணை யேது!?
அதை தடுக்கும்
அணை ஏது!!

மனை மறந்தோம்
தனை மறந்தோம்
நட்புடன் இருக்கும் வேளை...
உரசாது
ஒன்றானோம்
உசுராய்
என்று ஆனோம்!

விலாசம் தெரியாத
போதும்
மனம் -
விலகாது இருந்தோம்...
உயர்வுக்கு உவமை
உண்மைக்கு உவமை...
நட்பாய் தான் ஆனது!
நட்பால் தான் ஆனது!!

நாட்டு பண் போல
நாம் அறிந்தோம்
நட்பை...
உலக சிறந்த மொழி - அது
நட்பின் வழி!

வாழிய நட்பே
தூய நட்பே
துயரம் கண்டாலும்
தூரக் கண்டாலும்
விடாது நட்பே...
வீழாது
என்னுள் மாளாது
என்றும்!

நட்புடன்.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1