வருத்தம் வேண்டாம்...!

ஆலைகளில் ஆள்
 குறைப்பு...
வேலை இல்லாத
பெரும் காழ்ப்பு!
விற்பனை குறைவு
உற்பத்தி குறைவால்
வேலை இழப்பு!
வேண்டாத செய்தியா - நம்
காதில் ஒலிப்பு!

விரக்தி வேண்டாம்
சுயசக்தி உண்டு
நம்மிடம்...
புன் ஆகிபோன
மண்ணை மனம்
ஆக்குவோம்...
பணம் பண்ணும்
பொன் ஆக்குவோம்!

களைத்து போன
களைப்பைகளை
கலகலப்பாக ஆக்குவோம்!
கரிசல் மண்ணில்
கர்சினை காட்டுவோம்...
செம்மண்ணில்
செழுமை காணுவோம்
வேலை இல்லாதவர்களுக்கும்
வேலை இழந்த வர்களுக்கும்
விருந்தாய் உண்ண
நல் -
மருந்தாய் ஒன்று
சேருவோம்...

உன்னத தொழில்
ஒன்று -
உண்டென்று
உணர்வோம்!
உணவாய் - அது
போக
உற்பத்தி யாய்
விலை காட்டுவோம்!

சுய தொழில்
சுகம் கொடுக்கும்!
கைத் தொழில்
நமக்கு - அது
கை கொடுக்கும்!
என்ன அதுவென
கேட்டால்...
உன்னதம் அதுவென
சொல்லுவோம்!
உழவுக்கு திரும்புவோம்
அதை
உலகிற்கு
உணர்த்துவோம் !


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1