இராணி மங்கம்மாள்!

இராணி மங்கம்மாள்!

மதுரையின் பெருமையே
எமது குல அருமையே !!
பெண் இனத்து
பேர் உண்மையே...
வாழி நீயே!

வீரத்தின் வழிகாட்டி யே
அறம் காத்த
சிம்மாட்டி யே
அன்பு காத்து
உரமூட்டி
விதவை என்ற சொல்
 வீரத்திற்கு
பொருந்தாது...
என பறை சாற்றியே
இராணி மங்கம்மாள்
பெருமை
எம் - மாமதுரை
பெருமையே!!
என்றும் மாறாது
மறையாது
உன் புகழ்!
சுடர் விடும்
அகலாய்
எங்கள்
அகலிகையாய்...
நீ!

370- ஆம் ஆண்டு
போற்ற தக்க வகையில்
சிறப்பு அந்தஸ்து
எண்ணாய்
ஆற்றல் மிகு
பெண்ணாய்
எம் நெஞ்சில்
என்றும் நீங்கா இடம்...
அதை பறைச்
சாற்றும் உம் -
சத்திரம் , சாலை
அன்னதானம் கூடம்...
திகழும்
உம் மகுடமாய்
எம் மண்ணில்
அதை காணும் போது
கவ்ரவம்  எம் கண்ணில்...
இன்று மட்டும் அல்ல
என்றும்
வீர வணக்கம்
சொல்வோம்...
அரசர் வீர தீர
சொக்கநாதர்
திருமதிக்கு
வீரமாய் வணக்கம்
சொல்வோம்!
அரங்க கிருஷ்ண
முத்து வீரப்பன்
தாய்க்கு
சிரம் தாழ்த்தி
வணக்கம் சொல்வோம்...
வாழ்க வாழ்க
வணக்கங்கள் பல!!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1