மனதின் மகிழ்ச்சியில்...!

எத்தனையோ
வருடங்கள் ஆகிப்
போனது...
காலை நேர
பூங்குயில் ஓசை
குருவிச் சத்தம்...
வாசல் தெளிக்கும்
பெண்கள்!
குழாய் யடி குடங்கள்...
கூர்கா இல்லாத
குடில்கள்  - எனை
கவர்ந்தன
சிறு வயது
நினைவுகளாக!
தேநீர் அருந்த
தேவைப் பட்டது
சிறு தூரப் பயணம்...
சூரியன் கூட
சுடாத வேளை...
அந்த -
டீ கடை பெஞ்சு
தினத்தந்தி பேப்பரும்...
அலங்கார மில்லாத
லுங்கி பனியன்
கருத்த முகங்க ளும்
சூ டான
உளுந்த வடையும்
உதிரும்
தமிழ் நடையும்
கிராமத்து வாசனை
மாறாது...
சந்திரயான்
பேச்சு இல்லை
சாராய
பேச்சு மில்லை
சாதாரண பேச்சு
நக்கல் நையாண்டி வுடன்
வாய் பேசாது
மௌனம் காத்தேன்...
அவர் பேச்சில்
கவனம் காத்தேன்!
மெய் சிலிர்த்து
நேரம் அவை!
பழைய ரேடியோ
சின்ன ஸ்பீக்கரில்
ஆயர்பாடி மாளிகையில்...
இராதா புரத்தில்
(வள்ளியூர்)
கண்ணன் பாட்டு
காதில் ஒலிக்க
காலை வேளை
கானம் இனிக்க...
வந்த வேலை
மறந்த சூழல்!
அனுபவிக்க
நேர்ந்தேன்
உங்களுக்கு
அனுப்பிவைக்க
முகர்ந்தேன்...
நிறம் மாறாத
பூக்களாய்!
மனதின் மகிழ்ச்சியில்...

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1