கற்றுக் கொள்!

கற்றுக் கொள்!

எவரிடமும்
பழகும்முன்
கற்றுக் கொள்...
பேசுவது எப்படி என!

யாரையும்
அரவணைக்கும் முன்
கற்றுக்கொள்...
அன்பு செலுத்துவது
 எங்கனம் மென்று!

எதையும்
அடையும் முன்
கற்றுக் கொள்...
பொறுமையாக
இருக்க வழி
என்னவென்று!

எதையும்
ஆரம்பிக்கும் முன்
கற்றுக் கொள்...
முடிப்பது
எங்கனம் மென்று!

பணம்
வருவதற்கு முன்
கற்றுக் கொள்...
சேமிப்பது
எப்படி என்று!

எதிலும்
வளர்வதற்கு முன்
கற்றுக் கொள்...
பொறாமை
கொள்ளாது இருக்க!

தினம்
ஏமாறும் முன்
கற்றுக் கொள்...
ஏமாறாது
 ஏமாற்றாமல் இருக்க!

நிறைவா
நிலைத்திருக்க
மரணத்திற்கு முன்
கற்றுக்கொள்...
நேயமிக்க
மனிதனாய் இருப்பது
 எப்படியென...!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1