அரவிந் கெஜ்ரிவால்!
வாய்த்த
வாய்ப்பை
வகையா(ய்) பயன்படுத்தி
வழித்தடமாய்
வழி மாறா
நிலையா
நிறுத்த முயற்சி...
தட்டிப் பறிக்காது
தவறவிடாது
வெற்றிக்கான
வெற்றி காண
வழியாய்!
இலவசங்களோ
ஓட்டுக்கு பணமோ
அதிகார பயமோ
இல்லாது
கொஞ்சம் அரசியல்
மாற்றி
வசதி ஏற்றி
ஓரளவு சேவைகள்
சலுகைகள்
நேர்மை என
நேர்பட பேசி
சிறு தவறுகள்
சிறு பிழைகள்
பொருட்படுத்தாது...
பொத்தாம் பொதுவாய்
வழங்காது
பொறுப்பு ணர்ந்து
பொறுப்பு நிறைந்து
நினைந்(த்)து
வாக்களித்த
அந்த
தலைநகர் வாசிகளுக்கும்
வாக்களித்த மேதைகளுக்கும்
வாக்களிக்காத
மா மேதாவிகளுக்கும்
மரியாதை கலந்த
வணக்கங்கள் பல!
மூறாம் முறையாய்
முறையாக
துடப்பம்
முன்னெடுத்து
இன்னும்
பாக்கி உள்ளது
சுத்தம் பண்ண
வாய்ப்பு கேட்டு
வாய்த்த
வாய்ப்பை
வகையாய் பயன்படுத்தி
மீண்டும்
முதல்வராக
ஆம் ஆத்மியின்
தலைவராக
தலை நிமிர் தோழா!
தலைநகரின்
தன்மான தலைவா!
வழங்கிடு நல்லாட்சி
மக்களுக்கு உதவ
நல்லதாய்
ஒரு ஆட்சி!
ஆணவமில்லாது
அசிங்கமில்லாது
அவசியமுள்ளதாய்...
அர்த்தம் கொள்ளட்டும்
முதல்வரின்
இன்று-
முதல் அவரின்
பதவியும் பலமும்!
ஆக தலைவராக
கெஜ்ரிவால்!
இனி
ஆகட்டும் தலைநகர்
டெல்லியில்
கெத்து அவரால்!
வாழ்த்துகள்!
வாழ்க வளர்க!!
Comments
Post a Comment