வேண்டும் தமிழில்!
தஞ்சை யில்
தயங்கினோம்
தாமதமாய் குரல்
உயர்த்தினோம்!
உரிமை கேட்டோம்
நீதி கேட்டோம்
தனித்தனி பயணத்தில்
பலன் பெரிதில்லை...
புரிந்து கொண்டோம்!
சாமர்த்திய அரசு
சமன் செய்ய
முயற்சித்தது!
நீதி துறையும்
சாய்ந்து (சார்ந்து)
சென்றது...
சமம் தான் இரண்டும்
அங்கீகாரம் வுண்டு
இரண்டாவதற்கும்!
நம் மொழி வெல்ல
நம்மில்
ஒற்றுமை இல்லை
பெரிதாய் சொல்ல...
பார்த்தோம் வேர்த்தோம்
பலனில்லை
மனம் நொந்தோம்!
சொந்த நாட்டில்
சொந்த மொழி க்கு
இந்நிலை யா?
இனியும் வேண்டாம்
இதுபோல் ஒரு
நிகழ்வு
பக்கத்தில் வரவிற்கிறது
பழனி முருகன்
திருக்கோயில்
குடமுழுக்கு விழா!?
பயங் கொள்ள வேண்டாம்
பிற மண்ணீயர்
பிற மொழி பின்
பதுங்கி நிற்க வேண்டா
மாயை நீக்கி
வெளி வருவோம்
நம் மொழி
முத்தமிழ், செந்தமிழ்
செம்மொழி
சிறந்தது மூத்தது என
மொழி உணர்வோம்
இனம் காக்க
மொழி காக்க
ஒற்றுமையுடன்
ஒருங்கிணைந்து...
இனி
தமிழக த்தில்
தமிழ் கோயில் களில்
தமிழில் தான்
குடமுழுக்கு! - என
குரல் உயர்த்துவோம்
நம்மொழி சிறப்பு
உணர்த்துவோம்!
ஒன்று படுவோம்
வென்றெடுப்போம்!
எங்கும் தமிழ்
எதிலும் தமிழாய்
குடமுழுக்கு ம்
நன்னீர் தெளித்தலும்
தமிழ் மந்திரங்களால்
புதிர் சொற்களால் அல்ல
அழகாய் புரியும்
சொற்களால்!
அவகாசம்
அநேகமிருக்கு
ஆதாரிப்போம்
சுதாரிப்போம்
இனி
எம்மொழி யே
எங்கும்
முதன்மை யாக
ஒலிக்கட்டும்!
அன்புடன்
Comments
Post a Comment