வேண்டுதல்! வேண்டி...
குருவழி வேண்டிப் பெற்ற
அருளால்
வேண்டுகிறேன் முருகா!
உன் திருக்கோயில்
குடமுழுக்கு
தமிழில் நிகழ வேண்டி
நிகழ்த்த வேண்டி
அது - நிலைக்க வேண்டி
எல்லோர் மனதிலும்
அதை
நினைக்க வேண்டி
தமிழுக்கு முதலிடம் வேண்டி
தரணியிலே தமிழ்
மந்திரங்கள்
ஒலிக்க வேண்டி...
தாராளமனங் கொண்ட
தயாவே!
என் தமிழ் வேந்தே
தமிழ் கடவுளே!
அழகனே, அமுதனே
சிவமைந்தனே
முருகனே
உன்பாதம் பணிந்து
வேண்டுகிறேன்...
உன் தயவு வேண்டி
தடையில்லாது இது
நடக்க வேண்டி
எம் வேண்டுதலால்
உம்முன் வேண்டி
நினை வூண்டுகிறேன்!
வேல் கொண்டவனே
வேலவா கந்தா
கடம்பா கதிர்வேலா
தண்டபாணி சாமியே
உன் திருக்கோயில்
குடமுழுக்கு
தமிழில் நடந்திட வேண்டுகிறேன்
இது நடக்க
வேண்டுகிறேன்
நீயே முன்னின்று
நடத்திட வேண்டுகிறேன்
என் ஆசை நிறைவேற
உன் ஆசி வேண்டுகிறேன்!
பிறர் மனமும் இதை
தீவரமாய் யோசிக்க
வேண்டுகிறேன்
தமிழால் தமிழுக்காக
உம்மிடம் யாசித்து
வேண்டுகிறேன்!
இறையே
என் நிறையே!
எம் நெஞ்சம்
குளிரச் செய்வாய்
தமிழே!
எங்கும் எதிலுமாய்
உலகமெங்கும்
மிளிரச் செய்வாய்!
செவ்வாய் முகத்தோனே
என் தேச சுகத்தோனே
இதை நீ
செய்வாய்
சேவர் கொடியோனே
சேவகர் படையோனே
உம் அருளின்றி
ஆசியின்றி
ஏதும் நடா...
ஆக!
ஆகுக இதுவெல்லாம்
உன் அருள் வேண்டி
ஆசி வேண்டி
உன்பாதம் பலன் வேண்டி
அடிபணிகிறேன்
உன் பதில் வேண்டி
தமிழ் ஒலிக்கச் சொல்லும்
அந்த பதிவு வேண்டி
வேண்டுகிறேன்
வேண்டி உனை வேண்டி
என் மனந் தோண்டி
இது நிறைவேற
நிறைவேற்ற வேண்டி
வேண்டுகிறேன்
மீண்டுமொரு முறை
என் குருவருள்
உன் திருவருள்
கிடைக்கப் பெற
வேண்டுகிறேன்
எல்லாம் உன் செயல்
என்னால் ஆவது
ஏதுமில்லை...
என்னுள் எல்லாம்
இவ் வேண்டுதல்
மட்டு(மே) ம்!
Comments
Post a Comment