வேதனையின் வெளிப்பாடு...
வீழ்ந்தாலும்
எழுந்தாலும்...
எம் தமிழோடு
எம் தமிழுக்காக!
மாளாது
வீழாது மீட்டெடுப்போம்
தமிழராய்
தஞ்சையில்!
வெஞ்சினம் நெஞ்சினிலே
வஞ்சினம் ஏதுமில்லை...
தயங்காது
தளராது
பங்கெடுப்போம்!
உயிராய்
மெய்யாய்
உயிர்மெய் யாய்
வென்றெடுப்போம்!
தாய் மொழியாம்
தமிழ் மொழி யில்
மந்திரங்கள் (ளை)
ஓதிடுவோம்
குடமுழுக்கு வேளையிலே...
இயந்திரங்களாய்
மோதிடுவோம்
வாதிடுவோம்
அது வரும்
வேலையிலே!
எம்
பாட்டனும் பூட்டனும்
கட்டிய கோவி லது...
கோவில் அது!
எம் மொழி
செம்மொழி யாம்
தமிழ் மொழி யில்
குடமுழுக்கு!
காத்திடுவோம்
காத்து தந்திடுவோம்...
நம்
பேரன் பேர்த்திகளுக்கு!
உடை நீக்கினாலும்
உடையாய்
உயிர் நீங்கினாலும்
பெருமை கொள்வோம்...
பெருவுடையார் க்காக!
உறுதியாக போராடுவோம்
இறுதிவரை...
உடல் குருதி
குன்றும்வரை!
தாத்தா கட்டிய
கோவிலை
தந்தை காட்டிய
வழியிலே
தாயாய்
போற்றும் மொழி யினை
தமிழால்
தமிழராய்
ஒன்றுபடுவோம்
வென்றெடுப்போம்!
உணர்வு சுருங்காது
உரிமை கேட்போம்!
உரிமை க்காக உணர்ந்து
உண்மையாய் பகிர
சொல்வோம்...
பங்கு கொள்வோம்!
சொல்லாது கொள்ளாது
செயலிலே...
வெல்லாது போகாது
தமிழினம்
தமிழ் இயக்கம்!
பிறமொழி காழ்ப்பு
எமக்கில்லை...
எம்மொழி சிறப்பு
வேறெதிலு மில்லை!
எங்கள்
வேதனையின்
வெளி ப்பாடு...
வெந்து தனிந்த்து
செந் தீ!
கடந்த காலம்
மறவாதே...
காரிய(ம்) மாற்ற
முயலாதே!
அரசே நீ!
அந்நியனாய் - இதை
விளையாட்டாய்
எண்ணி விடாதே
வீணராய் நீ
மாறிவிடாதே!
விண்ணை முட்டும்
ஆற்றல்
தமிழுக்கு வுண்டு...
மண்ணை பிளக்கும்
ஆற்றல் அதன்
ஒலிக்கு(ம்) உண்டு!
தஞ்சை மண்ணிலே
தாத்தா கோவிலிலே
தமிழ் மந்திரங்கள்
முழங்கட்டும்...
ஒலிக்கட்டும்!
தமிழர் இனம்
ஒளிரட்டும்
வளரட்டும் மலரட்டும்
பக்தி தீயாய்
பரவட்டும்...
சக்தி பிறக்கட்டும்!
பாதிப்பு இல்லாது
குடமுழுக்கு
தமிழிலே நிகழட்டும்!!
அன்புடன்
தேவா.
Comments
Post a Comment