இழக்கு!

இழுக்கு...!

அரசே!
வெட்கம்
வேதனை
உமது செயல்...
தமிழிலும் குடமுழுக்கு
இரண்டாம் தர நிலை
எம் மொழி க்கு
வேண்டாம் உமது
பிச்சை!
தமிழில் மட்டுந்தான்
குடமுழுக்கு!
இதில் மாற்றமில்லை
எங்களது நிலை
மாறவு மில்லை!
தைரிய மிருந்தால்
அரசானை...
அரசே ஆனை
வெளி யிட்டுப்பார்
சமசுகிருதத்தில்!

தமிழ் இனமே!
தலை நிமிர்
உணர்வு கொள்
உணர்ந்து சொல்...
தஞ்சை பெரிய கோவில்
குடமுழுக்கு
தமிழில் மட்டுமே!
தமிழர்களே!
இன உணர்வு கொள்
இங்கு
மீண்டும் ஒருமுறை
ஒத்துலாமை இயக்கம்
தொடங்க வைக்காதே!
இந்நிலை
தொடர வைக்காதே...

அரசே!
நன்றி கொள்
அரசு இருப்பதும்
ஆட்சி நீடிப்பதும்
தமிழர்களின் வாக்கு!
இனியும்
 சொல் லாதே சாக்கு!

இது தமிழகம்!
உமது
ஆட்சி நடப்பது
நீதி கிடைப்பது
எல்லாம் -
தமிழர்களின்
வரிப் பணம்!
இது உமக்கு
இயலாது போனால்
அடுத்து 
தாங்கள் 
முயலாது போவோம்
இது-
வலியின் பலம்!
இன்னும்
பாராமுகம் தொடர் ந்தால்
போராட தயங்காது
தமிழினத்தின்
தனி குணம்!

வெற்றி கொள்வோம்!
போற்றி சொல்வோம்
தமிழே!
வாழ்க! வளர்க!!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1