தமிழ் ஆள...!
,அன்பர்களே!
நண்பர்களே
பேரன்பு மிக்க
பெரியோர் களே
தமிழ்மொழி
காவலர் களே
ஆர்வலர்களே
பற்றாளர்களே...
சித்தர் நெறி
தமிழ் நெறி
நெறியாளர் களே!
தமிழ் போற்றும்
பண்பாளர்களே
பெண் களே
இளையவர்களே!
மூத்தோர்களே
பத்திரிகை ஊடகத்தவர்களே...
மொழி பற்று மிக்க
அனைவருக்கும் ஓர்
அன்பு வேண்டுகோள்!
பழனி முருகன்
திருக்கோயில் குடமுழுக்கு
தமிழில் நடைபெற
தமிழில் மட்டுமே
நடைபெற
உடல் பொருள் ஆவி
யெல்லாம்
நம்- சிந்தை
எல்லாம்
அந்த எண்ணம் ஓங்கி
ஒலிக்கட்டும்!
அதற்கு முதற் கட்டமாய்
நம்
ஒற்றுமை காக்க
ஒற்றுமையை காட்ட
தினம் மாலை
ஆறுமணிக்கு
நம் இல்லங்களில்
தெரு கோயில் களில்
மற்றும பிற இடங்களிலும்
இரண்டு நிமிடம்
பூசை மணி அடித்து
மணியோசை ஒலிக்கட்டும்!
அல்லது அகல் விளக்கு
ஒளிரட்டும்!
ஒவ்வொரு வீட்டிலும்
வீதியிலும் ஊரிலும்
கிராம த்திலும்
மாநகர த்திலும்
பெருகி
மொத்த தமிழகத்திலும்
இம் மணியோசை
ஒலிக்கட்டும்...
இது பிற மொழி க்கு
எதிராக அல்ல!
நம் தமிழ் மொழி க்கு
ஆதரவாக...
மணி சத்தம்
பெருக பெருக
தமிழகம் உணர
தமிழில் குடமுழுக்கு
நிகழ
நம் ஒற்றுமை (யை)
காணலாம்!
நாளை முதல்
இல்லை வேண்டாம்
இன்று முதல்
மணியோசை கேட்கட்டும்
தொடங்கட்டும் பணி
தொடரட்டும் இனி...
வெளி படையாக
குரல்கொடுக்க
தயங்குபவர்களுக்கும்
களமிறங்கி
தெரு இறங்கி
போராட தயக்கம்
உள்ளவர்களுக்கு ம்
இது உதவ கூடும்!
கரம் கூப்பி
விழைகிறேன்
நன்றியாய்
அனைவருக்கும்
பகிர்ந்து தெரிவியுங்கள்!
மணியோசை
கேட்கச் செய்யுங்கள்
தமிழில் குடமுழுக்கு
மந்திரங்கள் தமிழில்
மங்கலமாய் ஒலிக்க...
இது நிகழட்டும்
நில வெட்டும் வரை
நிரந்தர தீர்வு
கிட்டும் வரை
அறநிலைய துறைக்கும்
நீதி துறைக்கும்
அரசுக்கும்
ஆட்சி க்கும்
அரசியல் கட்சி களுக்கும்
அவர்தம் மனசாட்சி
தொடும் வரை
இல்லந்தோறும்
இருக்கும் இடந்தோறும்
மணியோசை
ஒலிக்கட்டும்
தமிழகமெங்கும்
இது
எதிரொலிக்கட்டும்!
அதுவே-
தமிழர்களுக்கு
தமிழுக்கு
ஆதரவளிக்க ட்டும்
ஊக்க மளிக்கட்டும்
மன உறுதிவுடன்
இன ஒற்றுமை யுடன்
இனைந்திடுவோம்!
தமிழால்
தமிழுக்காக
தமிழர்களாய்
ஒன்றினைந்திடுவோம்!
வாருங்கள்
கரம் கோருங்கள்
மனம் சேருங்கள்
தமிழ் ஆள!
தமிழர் வாழ!
வணக்கம்
நன்றியுடன்.
Comments
Post a Comment