வழிமாறா...தலைமுறைக்கு!

நம் வழிமுறை
தவறினால்
நம் தலைமுறை
தவறாகும்!
நாம்
முன் செய்த பாவம்
பின் தொடரும்
சாபமா - இது!
தலைநகர் தில்லியில்
நடந்தேறிய வன்முறை
மதவெறி போக்கினால்
கவணிக்காது போன
வழிமுறை
தண்டிக்கப்பட்ட
இளந் தலைமுறைகள்
வருத்தமே மேலோங்கி
வாய்திறக்காது
போனதங்கை...
மதம் என்னச் செய்யும்
மறந்து போன
மனிதாபிமான உன்
நிதானாம்!
எத்தனைச் சாவு
எத்தனை ஓலங்கள்
எத்தனை தவிப்பு...
தவறி போனவன்
கற்றதென்ன
தப்பி போனவன்
இனி - கற்பதென்ன
இத்துனை நாள்
உடன் இருந்த
சகோதர ஒற்றுமை
எங்கு போனது!?
ஒற்றுமை இல்லாது
போனாதால்
நிம்மதி நில்லாது போனது!
நிதர்சனம்
நீர்வடியும் கண்களாய்
காட்சி பொருளாய்!
மரணீத்த 
முகம் பார்த்துச்
சொல்லுங்கள்
சிந்தி ஓடிய
குருதி யை கண்டு...
சொல்லுங்கள் - இது
எந்த மத த்தினர்
குருதி
உறுதியாக சொல்லமுடியுமா
சவந்தானே அதன்
பொது பெயர்
வேற்று மத்த்தில்
வேறு பெயர் என்ன
சொல்லுங்கள்!

மத அரசியலும்
மத ஆன்மீக
மத வெறியர்
ஆதரவாளர்கள்
இதன் மூலம்
கற்றதென்ன
பெற்றதென்ன?!
காவியோ பச்சையோ
காரியம் சாதித்தென்ன
கலகம் கூடாது என
தானே
தேசிய கொடியில்
இரு வண்ணமும்!
பின் ஏன் இந்த
வன்ம்ம்
மனிதம் கொன்று
மனிதன் வாழமுடியுமா?!
மதம் காக்க
போர் யென 
புறப்பட்டு
உயிர் நீத்து
சாவை சந்தித்த
உன் சவத்திற்கு
தெரியுமா
உன்மதம் என்னவானது
யென...
பெற்றவளை கொன்று
பிள்ளைகளை காப்பதா!

வீண் பேச்சு
வீண் உளறல்
வீண் உணர்ச்சி சண்டை
விடியலை தராது!
கரையான் புற்றாய்
வளர்வதற்கா
உன் மத கோட்பாடுகள்!
பிறரை கொல்லச் சொல்லி
பொருட்களை
தீயிக்கு இரையாக்க
எந்த மதம்
எங்கு சொன்னது!
பிறந்த மதத்திற்காக
வளர்ந்த வளர்த்த
நாட்டிற்கு தீங்கு
செய்யலாமா
நினையலாமா...
எந்த மதமும்
எல்லா மதமும்
பிரிவினை சொல்ல வில்லை
ஒற்றுமையை தான்
நல்அறத்தை தான்
போதிக்கிறது!
உங்களுக்கு மட்டும்
இப்படி நடக்க...
குறுஞ்செய்தி எங்கிருந்து வந்த்து!?
வேறு வேலை இல்லாத
போது-
இது கூட வேலையாக
போகும் போல
இனி 
மெல்ல சாகட்டும்
மதவெறி
நல்லா பரவட்டும்
மனித நெறி!

நேரத் தழுவ வேண்டாம்
நெஞ்சில் அள்ள வேண்டாம்
பகை கொள்ளாது
பார்த்து புன்னகை
செய் போதும்!
பாரதம் போற்றி
பாரத தாயின்
புதல்வர்களாய்
பகை நீக்க
நகை செய்வோம்!
இனி-
ஒற்றுமையில்
ஒழுக்கம் காப்போம்
வேற்று மதம்
ஏமாற்று விதம்
அரசியல் செய்ய
ஆன்மீக செய்ய
ஆசைபடுவோரே...
அமைதியாய்
புறந்தள்ளுவோம்
ஆனந்தமாய் அறம்
சொல்லுவோம்
எசுவும் அல்லாவும்
ஈசனவான்
நேசமுள்ளவன்
ஆசான் ஆவான்!
மொழி பற்று
அதிகமாக
சாதிப்பற்று குறையும்
நாட்டுப் பற்று
அதிகமாக
மதப்பற்று குறையும்
வந்தே மாதரம்!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1