வணக்கத்துடன்...,,!

உண்மை நிலை
உணர்ந்து கொண்டோம்
உணர்வு கண்டோம்!
உன்னதாமாய்...
இன்றைய
பாரத(ம்) நிலை
இதுவரை நாம்
பாராத நிலை!
நமது
ஒற்றுமை ஓங்கட்டும்
அரசுக்கு
ஒத்துழைப்பு தொடரட்டும்!
பொறுப்போடு
வீட்டோடு இருந்து
விளையாட்டாய் வீதிக்கு
வாராது
பொறுமை காத்த
எம் மக்களுக்கு
இது- இன்னலன்று
இன்றியமையா ஒன்று
மனந்திறந்து பாராட்டுகிறோம்
நெஞ்சு ஒன்றி
வாழ்த்துகிறோம்!
போர்க்கால அமைதியாய்
காணு மிடமெல்லாம்
கருஞ்சாலை
வெறிச்சோடி...
மனித தலைகள்
காணாத நிலைகள்!
விதிவிலக்கு எப்பவுமுண்டு
எப்படியு முண்டு
அதை பொருட்டாய்
கருத தேவையில்லை...
நன்னெறி
நல்லறம்
நல்லொழுக்கம்
பேணுவோம்
காப்போம் ஒற்றுமை
ஒத்துழைப்புடன்!
கைக் கொட்டி
மனம் ஒட்டி
பாராட்டுவோம்!
சுகாதார நல்வாழ்வு துறை
காவல்துறை
ஊடகத்துறை
தன்னார்வ பொதுநல
தொண்டு நிறுவனங்கள்
மருத்துவர் செவ்லியர்கள்
துப்பரவு தூய்மை
பணியாளர் கள்
காவலர்கள்
தன்நலம் சுயநலமின்றி
பணி செய்யும்
அனைத்து பணியாளர்கள்
அனைவருக்கும்
எமது
நன்றியை காணிக்கையாக்கி...
நாடு நலம்பெற
நாளை வளம்பெற
நானும் கரம் கூப்பி
வணங்குகிறேன்
இறை நாடி
குரு போற்றி
வேண்டுகிறேன்!
நன்றி! வணக்கம்!
வாழ்க பாரதம்
வளர்க பாரதம்.

என்றும் அன்புடன்.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1