ஒரு நிமிட கோரிக்கை!

எம்
ஓரு நிமிட கோரிக்கை
இம்
மானுடனின் ஓர் அறிக்கை!
வணக்கம் பல சொல்லி
இக் கூட்டத்தின் நோக்கம்
நிறைவேற
அதை தினம் சொல்லி
தமிழக அரசு - இதை
நிறைவேற்ற...
வெறும் 
சாட்சி மொழியாக
இல்லாது
ஆட்சி மொழி யாக
திகழ- அது நிகழ...
எல்லாம் வல்ல என்
குருவை வணங்கி
தென்னாடுடைய சிவனே போற்றி
எ(ந)ம்
தமிழ் கடவுள் முருகனின்
திருக்கோயில்
குடமுழுக்கு
தமிழில் நிகழ வேண்டி
நிகழ்த்த வேண்டி
தினமும் மாலை 
ஆறு மணிக்கு
இரண்டு நிமிட
மணியோசை எழுப்பி
என் வேண்டுதலை
அறிவித்துக் கொண்டு
இருக்கிறேன்!
இதை தங்களுக்கு(ம்)
தெரிவித்து கொள்கிறேன்
நம் இனம் காக்க
நம் மொழி காக்க
இணைந்திடுவோம்
உணர்வு பூர்வமாக
வெறும் உணர்ச்சி
போராட்டமாக இல்லாது
உள பூர்வமாக
ஒன்றுபடுவோம்
வென்றெடுப்போம்!
வாழ்க தமிழ்
வளர்க தமிழகம்

என்றும் அன்புடன்.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1