எண்ணத் தோன்றுகிறது...!

ஒர் எண்ணத் தோன்றல்
ஒரு எண்ணம்
தோன்ற...
சரியா தவறா?
அறியாது இருக்குது
என் மனம்!
ஐயம் கொண்டோம்
அதை-
அறியக் கண்டோம்
அறிவியலா
ஆன்மீக மா
அனேகப் பார்வையில்...
இன்னும்
அறியாமலே!
ஆழ்ந்து யோசித்த போதும்
சூழ்ந்திட்ட
இச் சூழ்நிலையில்
நானும் கைதியாய்
கண் கலங்கி
கை கழுவி...
யாரிடம் சொல்ல
இந்த
எண்ணத் தோன்றலை
எண்ணம் தோன்றுயதை!
வதந்தியா பரப்ப
எண்ணமில்லை
வருந்(தி) தீயாய்
எண்ணத்தின் பதிவு- என்
இந்த பதிவு!
வருந்தாமலும்
வருத்தாமலும் இருக்க...
குரு வேண்டுகிறேன்
அவர்
அருள் வேண்டுகிறேன்!

கடந்த மாதம்
வேறு மனநிலையில்
வேறு ஒரு எண்ண
ஓட்டத்தில்...
தஞ்சை பெரிய கோயில்
குடமுழுக்கு
தமிழில் வேண்டுமென
எத்தனை யோ செயல்கள்
முன்னறிவிப்பு போராட்டம்
உண்ணா நோன்பு
மாநாடு
சிறப்பு யாகம்
சிறப்பு வேண்டுதல்
தமிழ் நெஞ்சத்தில்
வளர
வஞ்சத்தில்
முடிந்த தருவாயில்...
தமிழ் பற்றாளர்கள்
தமிழ் ஆர்வலர்கள்
தமிழ் நெறியாளர் கள்
சித்தர்கள்
சித்த நெறியாளர் கள்
சித்த நெறி ஆதரவாளர்கள்
அனைவரது செயல்களும்
ஏற்காது
ஒரு நாள் செய்தியாய்
உலா வந்த போதும்
அதில் விலகா
மனங்கொண்ட பலர்...
வேதனையிலோ
அல்லது நன்கு
வேர் அறிந்து
அறிவித்தார்களோ
நமக்கு 
தெரிவித்தார்களோ
நான் அறியேன்!
ஆனால் சற்று
ஒரு வாரக் காலமாய்
நெஞ்சில் நிழலாட
நேர் குத்தி உறவாட
சற்றே 
சஞ்சலம் எம்முன்...
பெருமை மிகு
பெருவுடையார் திருக்கோயில்
குடமுழுக்கு - தமிழில்
நிகழா விட்டால்...
நம் இனத்திற்கும்
நம் நாட்டிற்கும்
ஏன் - இந்த உலகத்திற்கும்
பேரிழப்பு!
பொருளாதார 
பெரும் இழப்பு நிகழும்
நிகழ வாய்ப் பென...
சீறி சினந்து
சொன்னபோதும்
தமிழ் வேட்க்கையில்
தமிழ் ஆளாத
வேதனை யில்
வேடிக்கையாக
சொல்கிறார்கள் என
செவி மடவாது
சிரம் குனிந்து
மறுத்து விட்டோம்
அதையும் 
சில நாட்களில்
மறந்துவிட்டோம்!
சமீப நிகழ்வு
நோய்த் தொற்று
ஊரடங்கு
வீட்டில் உள்ளிருப்பு
உயிரிழப்பு...
பொருளாதார பேரிழப்பு!
பெரு வேதனை
நாம் பெரும் 
வேதனையாய் நிகழ
கண்முன் தவழ
ஊடக செய்திகளும்
அதை- குரல் உயர்த்திச்
சொல்ல...
பிரதமரும் முதல்வரும்
வேண்டுகோளாய்
எதையும் செய்யாதீர்கள்
எங்கும் செல்லாதீர்கள்
கரம் கூப்பி சொல்ல(கெஞ்ச)
தகவலாய் சிரமேறி அஞ்ச
உயிருக்கு அஞ்சி
வெளி போகாது...
போனது வஞ்சமாய்
நம் வாழ்க்கை!

பிரிதொரு நாளில்
உம்மை குளிரச்
செய்வோம்
சிவமே! 
என் தவமே!
அண்ட பேரண்ட
அருட்பேரரசர்
காவிரி ஆற்றங்கரை
கருவூரார் அவர்களை
கரம் கூப்பி
குடம் பாலூற்றி
குளிரச் செய்வோம்!
அவர் பாதம் பற்றி
இந்நோய் குறைக்கச்
சொல்வோம்!
மனம் ஒன்றி
மகிமை தேடுவோம்
கரம் கூப்பி 
இறை நோக்குவோம்!
நிறை காண
அய்யா!
எம் இனம் காக்க
எம் நாடு காக்க
இவ் உலகம் காக்க...
என்னால் ஆவது
ஏதுமில்லை
உன்னால் அன்றி
வாழ்வாதாரம்
எமக்கில்லை!

ஒரு எண்ணத் தோன்றல்
இவ் எண்ணம் தோன்ற
மனம் வருந்தியே
இப்பதிவு...
வேதனையுடன்
வேண்டுகிறேன்!
என் குரு போற்றி
இறையே நிறையே!
நிதானமாக்க
நிலை மாற்ற...
உன் நினைவேற்றி
வேண்டுகிறேன்!
நீ தானாமாக
தானம் ஆக...
கொடு இதை
எமக்கு!

அன்புடன்.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1