எண்ணதத்தைச் சொல்வேன்...!
என்னத்த சொல் வேன்
என்
எண்ணத்தைச் சொல்வேன்...
உலகமே அலறிடும்
ஓர் உண்மை நிலை
என்ன யெதுவென
அறியுமுன் தெரியுமுன்
பல்கி பெருகி - உயிர்
பலி வாங்கிவிட்ட தருணம்!
எத்தனையோ வளர்ச்சி
அறிவியல் முதிர்ச்சி
இருந்தும் என்ன பயன்?!
ஆணவ பேச்சும்
ஆவணப் பேச்சும்
இன்று- அடங்கி விட்டது!
உலகை
ஆள நினைத்த நாடும்
ஆள்வதாய் நினைத்த நாடும்
நா வறண்டு போனது!
போர் என்றால் கூட
எதிரி புலப்படுவான்
புரியாத புதிராய்
கண்ணுக்கு தெரியா
இருந்தும் - எதிராய்
கொரானா வைரஸ்
என்கிற கிருமியால்
கோரசாய் ஒன்று சேர்ந்து
கொத்துக் கொத்தாய்
நாடு நாடாய் நகர்ந்து
தன் பசிக்கு
இறையாக்கி கொண்டு...
தன் வேட்டையை தொடர்கிறது!
இது உலக பிரச்சினை
என - நாம்
உருகி பேச...
நம்மையும் உருட்டிப் போட
மிரட்டி பார்க்க
நம் தேசம் புகுந்த்தோ!?
போரென தெரிந்தால் கூட
புறம் காட்டாது
புண்ணிய பூமிக்கு
புனிதமாய் கொடுத்திருப்போம்
எம் மொத்த உயிரையும்!
சூழ்ச்சி யாக இருந்தால்
சூழ்நிலை புரிந்திருப்பொம்
சொல்லாது புகுந்த
அக்கிருமிக்கு முன்
செல்லா காசாய் போனது
அத்துனையும்!
அறிவியல் வளர்ச்சி
பொருளாதார எழுச்சி
வல்லரசுக்கான முயற்ச்சி
அத்துனையும் முடக்கிப்
போட்டது...
ஏற்றுமதி இறக்குமதி
ஏதும் நிகழவில்லை
உயிருக்கு முன்
அத்துனையும் சருகாய்
உதிர்ந்து போனது!
உலக நாடுகள் எல்லாம்
ஓலமிட்டு தவிக்கையில்
தவிர்க்கையில்
இறை காட்டியது
நம்பிக்கை வூட்டியது
நிதான போக்கு
மீள்வதற்கான இலக்கு
தடுமாறா
தடம் மாறா
நடவடிக்கைகள்...
மத்திய அரசுக்கும்
மாநில அரசுக்கும்
கரம் கூப்பி
நன்றி சொல்வோம்!
நமது சுகாதார துறை
சோர்வில்லா துறை
வல்லரசு நாடுகளுக்கு கூட
நல்லரசாக நமது செயல்...
உதவ கரம் கொடுத்து
வெளி நாட்டு வாழ்
இந்தியர்களுக்கு
வரம் கொடுத்து
வர அனுமதி கொடுத்து
அக்கறையாய் அனுசரணை யாய்
அரவனைத்த அந்த பாங்கு
உலக நாடுகள் மத்தியில்
நம் கரம் ஓங்கு(ம்)
பதற்றம் சொல்லாது
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பள்ளி கல்லூரி விடுமுறை
பெரும் கூட்டம் தவிர்க்க
பெரும் விளம்பரம்
கரம் கழுவ காணொலி
சுய ஊரடங்கு!
ஒத்துழைப்போம்
வீண் வாதம்
விட்டொழிப்போம்!
மூன்று வகையா மக்கள்
முயன்ற போதும்
முரண் பட்டபோதும்...
அதீத பயம் கொண்ட சிலர்
அலட்சியம் கொண்ட பலர்
புரிந்துணர்ந்து பொறுமை
காத்து
பிறருக்கும் எடுத்துச்
சொல்லி நடப்பவர்கள்
பாதிப்புகள் பரவுதற்கு
முன் - ஓடி மறையாது
முறையான முதல்
துவக்கம்!
தற்காப்பு தவறில்லை
கிருமிகள் தாக்குமுன்!
உயிருக்கு முன் எதுவும்
உயர்ந்த தில்லை
இறப்புக்கு முன்
இழப்புகள் பெரிதில்லை!
நாம் புரிந்துகொள்ள
இது புதுப் பாடம்
பேதம் பாராது
வாதம் செய்யாது
இந்தியர்கள் என்ற
ஒற்றை இலக்கை கொண்டு
உயிரை - உத்தரவை
உயர்வெனக் கொள்வோம்!
அரசு முயற்சி க்கு
ஒத்து செல்வோம்!
கொடிய தொற்றைக்
கூடாது தடுத்திடுவாம்!
விழித்திருப்போம்
தனித்திருப்போம்
சில காலம்
பின் எழுச்சிக் கொள்வோம்
செழுச்சி பெருவோம்!
நண்பர்களே!
இது தண்டனை அல்ல
தற்காப்பு...
எல்லோரும் ஒன்றென
என்னுவோம்
இது கூட நன்றென
கொள்ளுவோம்!
வாரா நோய்க்குத்தான்
இந்த விடுப்பு
இத்தனை தடுப்பு
வந்த பின்...
அதை யோசிக்காது இருப்போம்.
இந்தியா வல்லரசு
ஆகும் நேரமிது
பாரதம் பலம் பெரும்
நேரமிது
உலக நாடுகள்-நம்மை
உற்று நோக்கும் வேளையில்
நாம் ஒற்றுமை காட்டுவோம்
மனவலிமை கூட்டுவோம்!
அசாதாரண சூழ்நிலையில்
நாம்
அலட்சியம் வேண்டாம்!
அரசுடன் அறம் சார்ந்து
நிற்போம்!
கரம் தட்டிச் சொல்வோம்
நம்மை காத்தமைக்கு!
மனம் கழுவி
ஆணவம் கொல்வோம்
ஆக கரம் கழுவி
நம்மை காத்துக் கொள்வோம்!
நம்மோட இந்த
முயற்சி...
நாட்டோட பெரும்
வளர்ச்சி!
வாழ்க பாரதம்
வளர்க ஒற்றுமை!!
அன்புடன்.
Comments
Post a Comment